அதனைத் தொடர்ந்து தேசத்தின்குரல் அவர்களது திருவுருவப்படத்திற்கு டீழnn நகரச்செயற்பாட்டாளர் சுதன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்கள். அதன் பின்அணிவகுத்துவந்த தமிழ் உறவுகள் மலர்வணக்கத்துடன் கூடிய சுடர்வணக்கத்தையும்
செலுத்தினர்.அதன் பின்பு செந்தளிர் இசைக்குழுவினரின் இசைவணக்கம் இடம்பெற்றது.தொடர்சியாக நடுகல்பூமி இறுவட்டைத் தயாரித்த இசைக்கலைஞருக்கான மதிப்பளிப்பு நிகழப்பெற்றது.
தொடர்சியாக இடம்பெற்ற எழுச்சிநடனங்களை ஆசிரியை யனுசா பிரதிப், ஆசிரியை றஐpனி சத்தியகுமார், ஆசிரியை சாவித்திரி இம்மனுவல், ஆகியோரின் மாணவிகள் வழங்கினர்.தொடர்சியாக நிகழ்வில் இசையமைப்பாளர் திரு. கண்ணன் அவர்களின் குழுவினர் தமிழீழ எழுச்சிப்பாடல்களை மிகவும் இனிமையான வகையில் தமிழிசையில் வழங்கினர்.இறுதியாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணியினை புலம்பெயர் தமிழ் உறவுகள் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் என்ற உறுதிமொழியோடு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment