Sunday, December 18, 2011

தமிழர் காணிகள் எனக் கூறுவது புலிகளின் பிரச்சினை போன்றது !


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள காணிப்பிரச்சினைகள் 10 வருடங்களுக்குள் முற்றாகத் தீர்த்துவைக்கப்படும் என்றும், வடக்கு, கிழக்கு காணிப்பிரச்சினையை இனவாத ரீதியில் நாம் நோக்கவில்லை என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் காணி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

வடக்கு, கிழக்கு காணிப்பிரச்சினைகளை இனவாத ரீதியாகப் பார்க்கமுடியாது. தமிழ் உறுபினர்கள், "தமிழர் காணிகள்' என்று குறிப்பிட்டுப் பேசுகின்றனர். தமிழர்களின் காணிகள் என்றோ, சிங்களவர்களின் காணிகள் என்றோ அல்லது முஸ்லிம்களின் காணிகள் என்றோ அங்கில்லை. அவை இலங்கையர்களின் காணிகள். இப்படித்தான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கவேண்டும். இனவாதரீதியாக இந்தப் பிரச்சினையைப் பார்த்து தமிழர்களின் காணிகள் என்று சொல்வது புலிகளின் பிரச்சினையைப் போன்றதாகும்.

"பிம்சவிய" என்ற திட்டத்தின் ஊடாகத் தமிழர்களின் காணிப்பிரச்சினைகளைத் தீர்க்க நாம் நடவடிக்கை எடுத்தோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவரது இரண்டு காணிகளின் பிரச்சினை தொடர் பாக வழக்குத் தாக்கல் செய்தார். இதற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தமிழர்களின் காணிப்பிரச்சினையைத் தீர்க்கும் எமது நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதாவது தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணியை தமிழர் காணி என்று சொல்லாமல் இலங்கையர் காணி என்றா சொல்லமுடியும் ? இது என்ன வேடிக்கையான பேச்சாக உள்ளது. எதில் எதில் இலங்கைத் தேசியத்தை புகுத்த முடியுமோ அவை எல்லாவற்றிலும் அல்லவா இவர்கள் இலங்கை தேசியத்தை புகுத்துகிறார்கள்.

No comments:

Post a Comment