யாழ்.நகரின்பகுதியிலசுகாதாரத்திணைக்களத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பை பாதுகாப்பு அமைச்சுக்குப் பாரப்படுத்துமாறு காணி அமைச்சினால் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்.நகரின் கரையோரப் பிரதேசமான பண்ணையில் சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குமாறு கோரி யாழ். பிரதேச செயலகத்துக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்குப் பிரதேச செயலகம் பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் அந்தக் காணி சுகாரதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தினால் குறித்த காணி அளவீடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சினால் காணி அமைச்சுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காணி ஆணையாளர் நாயகம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு மேலும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான அந்த 2 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment