Saturday, January 14, 2012

பிஜி தீவில் நீதிபதியாக நியமனமானார் பிரபாகரன்!


தென் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிஜி தீவின் நீதிபதியாக, இலங்கையின் தமிழரான பிரபாகரன் குமாரரட்ணம் நியமனம் பெற்றுள்ளார்.
பிஜியின் ஜனாதிபதி Ratu Epeli Nailatikau மற்றும் பிஜியின் பிரதம நீதியரசர்  முன்னிலையில் அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டதாக  “தெ பிஜி டைம்ஸ் ஒன்லைன்” செய்தி  வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பட்டதாரியான பிரபாகரன், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும் கடமை புரிந்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் உயர் நீதிமன்றத்திலும் சட்டத்தரணியாக பிரபாகரன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment