இந்தியாவின் ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகள்
ஆசியாவில் உள்ள மற்ற எந்த நாட்டைக்காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர்
என ஹாங் காங் சார்ந்த அரசியல் பொருளாதார கன்சல்டன்ஸி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
ஆசிய
நாடுகளின் அரசு அமைப்பு முறை அதிகாரிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு
செய்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விதம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பது
திறமையற்ற
அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று
இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வியத்நாம் (8.54),
இந்தோனேசியா (8.37), பிலிப்பின்ஸ் (7.57), சீனா (7.11), மலேசியா (5.89),
தென் கொரியா (5.87), ஜப்பான் (5.77), தைவான் (5.57), தாய்லாந்து (5.25),
ஹாங் காங் (3.53), சிங்கப்பூர் (2.25) ஆகிய நாடுகள் வருகின்றன.
இந்தியாவைப்
பொறுத்தமட்டில் அந்நாடு சந்தித்து வரும் ஊழல், உள்கட்டமைப்பு பற்றாக்குறை
உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் அனைத்துக்கும் அதிகாரிகளின் திறன் குறைவே
காரணம்.
அவர்களில்
பெரும்பாலானோர் மேஜைக்கு கீழ் கையூட்டு வாங்குபவர்களாகவும், தனியார்
நிறுவனங்களுக்கு உதவி செய்து ஆதாயம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர்.
இதுபோன்ற அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்களும் இணங்கிச் சென்று அதிக ஆதாயம்
அடைகின்றன. அவர்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்தியாவில்
உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் எந்த ஒரு பிரச்னையையும்
நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்பதை விடுத்து சம்பந்தப்பட்ட
தரப்புடன் சமரசம் காண்பதையே விரும்புகின்றன. நீதிமன்றத்துக்கு செல்வதை
முடிந்தவரை தவிர்க்கவே முயல்கின்றன.
தாங்கள்
எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்காதபோது அதற்குத் தார்மிகப்
பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது
முடிவு தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான்
முனைப்புகாட்டுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment