Saturday, February 18, 2012

இலங்கைக் கடல் படையினர் ஒழுக்கம் இல்லாதவர்கள், இராணுவ பேச்சாளர் அதிரடி!



ஒழுக்கம் ஆனவர்கள் என்று இலங்கைக் கடல் படையினரை சொல்ல மாட்டார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு  சொல்லி இருக்கின்றார் இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.மன்னாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கடல் படையினரால் கைக்குண்டு வீசப்பட்டது என சாட்டப்பட்டு இருந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்களில் தூதரக அதிகாரிகளுக்கு கருத்துச் சொன்னபோதே இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்.

தேவாலயம் மீது கடல் படையினர் கைக்குண்டு வீசி இருக்கின்றமைக்கான சாத்தியத்தை மறுக்க முடியாது உள்ளது, ஆனால் கடல் படையினர்தான் வீசினர் என்றும் உறுதியாக சொல்ல முடியாது, 1980 களில் இலங்கை இராணுவம் ஒழுக்கம் குறைவானதாக இருந்தது, ஆனால் பின்னர் ஒழுக்கத்தை சிறப்பாக பின்பற்றியது, ஆனால் கடல் படையினர் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது, கடல் படையினர்கள் ஒழுங்கீனமானவர்கள், ஊர்காவல்துறையில் 2006 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி 13 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பின்னால் கடல் படையினர் இருந்திருப்பார்களானால் ஆச்சரியப்படுகின்றமைக்கு இல்லை என பிரசாத் சமரசிங்க கூறி இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆ





No comments:

Post a Comment