Thursday, February 09, 2012

கருணாநிதி விமர்சனம் பற்றி தனித் தமிழர் சேனை அமைப்பு கருத்து



பெங்களூர்,
பிப். 8: விஜயகாந்த் மீதான பேரவைத் தலைவரின் நடவடிக்கை குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கும் கருத்து, திமுக, தேமுதிக ஆகிய இரு அநாகரீகங்களும் கை கோர்ப்பதாகவே தெரிகிறது என்று தனித் தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் க.நகைமுகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1972-ல் கட்சி கணக்கை கேட்ட
காரணத்தால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். புதிய கட்சித் தொடங்கி, 13 எம்எல்ஏக்களுடன், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கருணாநிதி அரசை விமர்சித்தார். அப்போது சட்டப் பேரவை வளாகத்தில் எம்.ஜி.ஆரை நோக்கி செருப்பு வீசி, ஆளும் கட்சியினர் அநாகரீகமாக நடந்துகொண்டனர்.  1989-ல் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது. விஜயகாந்த் சட்டப் பேரவையில் இருந்து வெளியில் வரும்போது மடிப்பு களையாத உடையுடன் வந்தார். இதுவே சட்டப் பேரவையில் அடக்குமுறை நடக்கவில்லை என்பதற்கு சான்று.  இந்நிலையில்  சட்டப்பேரவையில் அநாகரீகமாக நடந்துகொண்ட விஜயகாந்த் மீது பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கையை அடக்குமுறை என்றும், ஜனநாயகம் உடைக்கப்படுவதாகவும் கருணாநிதி விமர்சித்துள்ளார். இது திமுக, தேமுதிக ஆகிய இரு அநாகரீகங்களும் கை கோர்ப்பதாகவே தெரிகிறது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
First Published : 09 Feb 2012 01:12:32 PM IST

1 comment:

  1. பெரியாருடைய கடவுள் மறுப்புக்கொள்கை தான் தன்னுடையது எனவும், ஜெயலலிதா தேர்தலில்
    வெற்றி பெற்றால், தான் மொட்டை போட்டுக் கொள்ளப்போவதாகவும் அறிவித்த நகைமுகனாரே,
    ஏன் இதுவரை மொட்டை போட்டுக் கொள்ள வில்லை? நாடு கடந்த தமிழீழ அரசின் பெயரால் ஆதாயம் தேடிக்கொள்வதற்காக, தஞ்சையில் ஒரு முழுநாள் மாநாடு நடத்தப் போவதாக ஆகஸ்ட் 2011 முதல் டிசம்பர் 2011 வரை ஒரே விளம்பரத்தை அவ்வப்போது தேதிகளை மட்டும் மற்றிப்போட்டுத் தொடர்ந்து ஐந்து மாதங்களாகப் பித்தலாட்டம் செய்து வந்ததும், பின் மாநாடு நடை பெறாமைக்கான காரணம் குறித்து வாயே திறக்காத மர்மம் தான் என்ன நகைமுகனாரே- மன்னியுங்கள் சர்தார் நகைமுகனாரே? சீக்கியர்கள் சூட்டிக் கொள்ளும் அந்த அடைச்சொல்லை உங்களுக்கு குரு நானக் அவர்களே கொடுத்தாரா? கருணாநிதி ஆட்சி 1991 இல் உங்களால் தான் கலைக்கப்பட்டது என்று இப்போது கூறுவது இந்நூற்றாண்டின் மிகப்பெரும் ஜோக் அல்லவா? பெங்களூரில் ஒருவர் அண்மையில் தான் உங்களுக்கு 'தமிழர் திலகம்' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். அவரையே மிதித்து விட்டு இப்போது திடீரென சர்தார் ஆகிவிட்டது முறை தானா? வேண்டம் இனியும் இவை போன்ற
    உங்கள் பித்தலாட்டங்கள்.

    ReplyDelete