ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு
ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து இலங்கையின் சர்ச்சைக்குரிய இராணுவ மேஜர்
ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.தமது நடவடிக்கைகளில் அவர்
பங்கேற்பதில் இருந்து விலக்கப்படுவதாக அந்தக் குழு அறிவித்துள்ளது.
ஐநாவுக்கான இலங்கையின் துணை நிரந்தரத்
தூதுவரான சவேந்திர சில்வா அமைதிகாப்பு படையினரை வழங்குவதற்கான நாடுகளுக்கு
எவ்வளவு நிதி வழங்குவது என்பது குறித்து ஆராயும் குழுவுக்கு ஆசிய
நாடுகளின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, ஒரு கனடிய இராஜதந்திரியால் தலைமை தாங்கப்படும் ஐநா அமைதிகாப்பு பணிகளுக்கான புதிய ஆலோசனைக்குழு சவேந்திர சில்வாவின் பங்களிப்பு தமது குழுவின் செயற்பாடுகளுக்கு '' பொருத்தமற்றது அல்லது உதவிகரமானது அல்ல'' என்று கூறி தமது நடவடிக்கைகளில் இருந்து அவர் விலக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment