Thursday, February 16, 2012

நீதிக்கான நடைபயண வீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள் – ஜெகன் அங்கிள்


பதினொராவது நாளாக உற்சாகமாகவும் கம்பீரமாகவும் தமிழர்களது விடிவுக்காக நடை போடும் எங்கள் தம்பிகளுக்கு ஜெனிவாவில் இருந்து பெல்யியம் வரை நடந்த எங்கள் மூவர் வினோத், சகோதரி தேவகி, மற்றும் ஜெகன் அங்கிள் சார்பில் அன்பு வாழ்த்துக்கள்.நீங்கள் மூவரும் உங்கள் நடைபயண அறிக்கையில் கூறியது போல் “எமது தலைவர் எமக்கு முன்னர் செல்கின்றார், எமது தேசியக் கோடி உயரப் பறக்கின்றது ஆதலால் நாம் அவருக்கு வலுச் சேர்க்க பின்னால் நடக்கின்றோம்”. வாழ்க, வாழ்க, வாழ்க.
எம் மாவீரர்களும் போராளிகளும் தேசிய உணர்வாளர்களும் மக்களும் செய்த அர்ப்பணிப்புகளுக்கு அர்த்தம் கொடுக்கின்ற கடமை தமிழ் தாயக மக்களின் கைகளிலும், புலம் பெயர்ந்த மக்கள் கைகளிலும் தான் தங்கியுள்ளது.
அதை தமிழ் மக்கள் ஆகிய நாம் செய்கின்றோம் , ஆனால் அது மென்மேலும் பெருகி, உலக வல்லரசுகளுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் நாம் எமது பலத்தை வலுவடைய செய்யவேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு விடிவு வரும்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு , நாங்களும் திரளுவோம் , வெற்றி நிச்சயம்.
எமது மதிபிற்குரிய தேசியத் தலைவர் கூறுவது போல் “போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறது.”
தியாகி திலீபன் அன்று இறுதியாகக் எங்களிடம் கேட்டுக் கொண்டது போல் பரிபூரண புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது. நாமெல்லோரும் ஒற்றுமையாக இணைந்து துரிதப் படுத்துவோம். தமிழீழம் மலர்வது நிச்சயம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
அன்புடன்
ஜெகன் அங்கிள்

No comments:

Post a Comment