கூடங்குளம் அணு உலையை திறந்தே ஆக வேண்டும் என இந்திய அரசு தனது வல்லாதிக்க சக்தியை போராட்ட குழுக்களின் மீது திருப்புகிறது .ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராடிய போது, அயல் நாடுகளி லிருந்து பணம் வருவதாக இந்திய அரசு. அவர் மேல் குற்றம் சுமத்தியது அதே குற்றச்சாட்டை இன்று அணுஉலைக்கெதிராக போராடி வரும் கூடங்குள மக்களின் மீதும் அதன் ஒருங்கிணைப்பாளர் உதய குமார் மீதும் சுமத்துகிறது .
ஜப்பானில் புகுசிமா அணுஉலை வெடிப்பு நிகழ்ந்தவுடன் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா முதற் கொண்டு ஐரோப்பிய நாடுகள் கடுமையாக முயற்சி செய்தும் சில மாதங்களுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை .
அதற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாகவும் ,லட்சக்கணக்கான மக்கள் கடுமையான கதிர்வீச்சுக்கு ஆளாகியுள்ள தாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஜப்பானுக்கு அருகே, உலக வல்லரசு நாடுகள் இருந்தும், அவர்கள் கூட்டாக இணைந்து முயற்சி செய்தும், அணு உலையையும் அங்கிருந்த மக்களையும் காப்பாற்ற முடியவில்லை.
இங்கு அது போல ஒரு விபத்து நிகழ்ந்தால் , தமிழக மீனவனை காப்பாற்ற முடியாத இந்திய அரசு தமிழக மக்களையா காப்பாற்ற போகிறது ?
அல்லது நாம் தான் தப்பித்து நமது அண்டை மாநிலங்களுக்குள் நுழைய முடியுமா ? குடிக்க நீர் கொடுக்க மறுக்கும் அவர்கள் தங்க இடம் கொடுப்பார்களா?
அப்படி ஒரு விபத்து நிகழ்ந்தால் முதல் வேலையாக, தமிழக மக்கள் வெளியேற முடியாத படி இந்திய அரசு தமிழக எல்லையை மூடி விடும்.ஜப்பானில் அப்படிதான் நடந்ததாக உறுதியில்லாத தகவல்கள் கூறுகின்றன .
கடை கோடி என்பதால் தமிழர்நாடு மட்டுமே பாதிக்கப்படும் .நமது அண்டை மாநிலங்கள் பாதிக்கப்படாது என்பதால் தான் இந்திய அரசு அணு உலையை இங்கே கொண்டு வந்து நிறுவியிருக்கிறது .
கூடங்குளத்தில் போராடுபவர்கள் படித்த அறிவாளிகள் அல்ல.சாதாராண மீனவ மக்கள் .ஆனால் அவரகள் ஒவ்வொருவரும் அணு உலையால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி முழுவதுமாக அறிந்துள்ளனர் . நன்மையை விட தீமையே அதிகம் என்பதை உணர்ந்ததால் உறுதியாக போராடுகின்றனர் .
படித்த அறிவாளிகள் என்று கூறி கொள்கின்ற நகரத்திலும் ,கல்லூரி மாணவர்கள் இடையேயும் இதை பற்றி விழி புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது .
கூடங்குளம் என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வாதார சிக்கல் மட்டுமல்ல . தாய் மண்ணான தமிழர் நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடைமையும் உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு .
மீனவனை காப்பாற்ற முடியாத, கையாலாகாத இந்திய அரசை எந்த ஒரு முட்டாள் தமிழனும் நம்ப மாட்டான் .
No comments:
Post a Comment