Monday, February 13, 2012

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி சர்வதேசத்தை நோக்கிய மூன்று கோரிக்கைகளுடன் லண்டனில் இருந்து பாரிஸ் வழியே ஜெனீவாவை இந்த நடைப்பயணம் செல்லவுள்ளது.


ஜனவரி 28ம்ஆம் திகதி அதாவது இன்று தொடங்கும் இந்த நடைப்பயணம் பெப்ரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமை சபையின் இடம்பெறவுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் மக்கள் எழுச்சி நிகழ்வில் நிறைவடையும்.

இன்று காலை Westminster, London, SW1A 0AA இடத்தில் இந்த நடைப்பயணம் தொடங்கியயுள்ளது.

லண்டனில் இருந்து ஐவருடன் தொடங்குகின்ற இந்த நடைப்பயணத்தின் போது பிரான்சுக்குள் உள்நுழைந்ததும் பாரிசில் இருந்து இருவர் இந்த நடைப்பயணத்தில் இணையவுள்ளனர்.

1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.

2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.

3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.

ஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.

No comments:

Post a Comment