Saturday, February 11, 2012

தமிழருக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது - பாகிஸ்தான் நாளிதழில்



நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டோன்‘ (Dawn) நாளேட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரபலமான ‘டோன்‘ நாளேட்டில் ‘சிறிலங்காவில் போர்க்குற்றங்கள்‘ என்ற தலைப்பில் இன்று இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

கொழும்பிலும் ஈரானிலும் பிபிசியின் முகவராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் இந்தக் கருத்தை எழுதியுள்ளார்.


“தமிழ்ப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஜெனிவாவில் அடுத்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கு தீர்மானம் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் இன்று பாகிஸ்தானில் மூன்று நாள் பயணத்தை தொடங்குகிறார்.

சிறிலங்காவில் நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது.

ஐ.நா மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் உயிர் பிழைத்தோர், இறப்புகளை இன்னும் கணக்கெடுக்கிறார்கள் என்ற தலைப்பிலான நூல் ஒன்றை பிரான்சிஸ் ஹரிசன் இந்த கோடை காலத்தில் லண்டனில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment