Tuesday, February 07, 2012

நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்கள் ஐரோப்பா நாடுகளுக்கான பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்.

2 வது நாளான இன்று நீதிக்கான பயணத்தினை மேற்கொண்டவர்கள் ஐரோப்பா நாடு களுக்கான பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தம் நடைப்பயணத்திற்கான நோக்கங்கள்  பற்றி விளக்கி கூறினார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கின்ற 19வது கூட்டத்தொடரில் இலங்கையில் தமி;ழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்களுக்கான உண்மைத் தன்மையை எடுத்துக்கூறுமாறும் கேட்டுக்கொண்டனர்.
நடைப்பயணத்தை மேற்கொண்டவர்கள் கூறுகையில் :
தமிழீழ தேசியக் கொடியுடன் சென்றால் அவர்களை உயர் அதிகாரிகள் சந்திக்க மாட்டார்கள் என்ற கருத்து மக்களிடையே நிலவி வந்ததாகவும் ஆனால் தாங்கள் எமது தேசியக்கொடியுடன் தான் அவர்களை சந்திக்க சென்றிருந்தோம் என்றும். அங்கிருந்த உயர் அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்களோடு எமது பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்துகொண்டாகவும் கூறியிருந்தனர்.
மேலும் இச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபை ஊடாக தமிழர்களிற்கான ஒரு இறுதி தீர்வு ஒன்று முன்வைக்கப் படவேண்டும் எனவும் வலியுறித்தினார்கள்.

No comments:

Post a Comment