26-03-2012 அன்று இத்தாலி பியமொந்தே மானிலத்தில் உள்ள திறிவேறோ
நகரசபையின் அனைத்த கட்சிகளும் பங்கெடுத்த வருடாந்த கூட்டத்தில் கலந்து
கொண்ட ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பைச்சேர்ந்தோரால் சணல் 4 இல்
வெளியான தமிழினப்படுகொலை தொடர்பான காட்சிப்பதிவுகள் காண்பிக்கப்பட்டு
தமிழ் மக்களின் வரலாறும் இன்றைய நிலை தொடர்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து
நகர முதல்வர் உரையாற்றுகையில் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை ஓரளவு
அறிந்திருக்கிறேன் ஆனால் இவ்வாறான மனித வதைகள் நடந்ததை இப்போதுதான்
காட்சியாக பார்த்தேன் என்று கூறி இனியும் நாம் காலம் தாட்தாது இன்னும்
மக்கள் அழிவதற்கு முன் நாம் அனைவரும் இதை தடுக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றியவர்கள் இத்தாலியில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலையானதானது மிகவும் மகிழ்ச்சியானது என்றும் ஆனால் இத்தாலி ஊடகங்கள் இச்செய்தியை பிரசுரிக்கவில்லை என்றும் மிகவும் கவலைப்பட்டனர்.
தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களுடைய கருத்து பரிமாற்றங்களைத்தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் ஏகமனதாக எடுத்த தீர்மானமானது.
• தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமான சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை செய்வதற்கு இத்தாலி அரசை கோருதல்.
• தமிழ் மக்கள் தாயகம் ,தேசியம் ,தன்னாட்சி உரிமை பெற்ற மக்களாக தங்கன் மண்ணில் வாழ்வதற்கு ஆதரவு வழங்குதல்.
• இத்தாலியில் வசிக்கும் தமிழ் மக்களுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் வழற்சிக்கு ஒத்துளைப்பு வழங்குதல்.
இவற்றை உள்ளடக்கி எதிர்வரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்படும் இத்தீர்மானத்தை இத்தாலிய அரசிற்கும் தங்கள் தங்கள் கட்சித் தலைமைகளிற்கும், ஊடகங் களிற்கும் வெளிக்கொண்டு வருவதாக உறுதியளித்து நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment