Tuesday, March 06, 2012

ஜெனீவா ஐ.நா முன்றலில் திரண்ட 5000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள்!


ஜெனீவாவில் இன்று நடைபெறுகின்ற நீதிக்கான ஒன்றுகூடலில் 5000 ற்கும் மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக ஒன்றுதிரண்டுள்ளனர்.
இன்று மாலை 2:10 ற்கு ஆரம்பமான நிகழ்வில் சுவிஸ் தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.





அதன் பின் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், ஈழத்தமிழர்களை காப்பாறக்கோரியும் ஆசிய ஐரோப்பிய நாடுகளில் தம்மை தீக்கிரையாக்கிய தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாயின..
கடந்த மாதம் 5 ஆம் திகதி (05.02.2012) அன்று பெல்ஜியம் தலைநகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் இருந்து நிரந்தர விடிவிற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் ஏங்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணத்தை இன்றைய தினம் ஐ.நா முன்றலில் நடைபயணத்தை நிறைவுசெய்திருந்தனர்.
ஒட்டுமொத்த தமிழர்களின் வலிகளையும் சுமந்தவர்களாக ஈழத்தமிழினத்திற்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதற்காக தம் உடலை வருத்தி கடந்த 30 நாட்களாக நடைபயண மேற்கொண்டிருந்த இவர்களை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அன்போடும், மதிப்போடும் வரவேற்றதை காணமுடிந்தது.
தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதனால் மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்.

No comments:

Post a Comment