Friday, March 02, 2012

சிரியாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா கவலை! இலங்கைக்கு சார்பான போக்கில் இந்தியா?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

நாடுகளின் மீது கொண்டு வரப்படும் குறிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்து விடலாம், என்று நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் இந்தக் கருத்து சிறிலங்காவுக்கு சாதகமானதாக அமையலாம் என்று
கருதப்படுகிறது.

நேற்றுக்காலை சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தை அடுத்து நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு ஆதரவாக 37 நாடுகள் வாக்களித்தன. சீனா, ரஸ்யா கியூபா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி வெளியிட்டுள்ள கருத்து, சிறிலங்கா விவகாரத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பதை வெளிப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்கலாம் அல்லது நடுநிலை வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment