Posted by SankathiWPadmin on March 11th, 2012

அதை முறியடிக்கும் விதமாக பெர்லின் இளையோர்களால் ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அந்தவகையில் பல்லின மக்கள் இலங்கை அரசின் சர்வாதிக போக்கை கண்டித்து தமது வெறுப்பை வெளிப்படுத்தினார்கள். அத்தோடு தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்ததை உறுதிப்படுத்தி தமது கருத்துக்களை பகிர்ந்தார்கள்.
அனைத்துலக சுற்றுலாதுறையின் தகவலின் அடிப்படையில் சென்ற ஆண்டு 2011 சிறீலங்காவுக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட கூடுதலாக அதிகரித்ததாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
60 இற்கு மேலான ஆண்டுகள் கடந்தும் தமிழரின் உரிமைக்கான கேள்விக்கு எந்த பதிலும் அல்லாது , சிறீலங்கா இனவெறி அரசு அதி உச்ச ஆக்கிரமிப்பாய் 2009 ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சர்வதேச போர் விதிமுறைகளை மீறி நச்சுக்குண்டுகளை வீசி அழித்து வெற்றி கொண்டாடியது.
அதை தொடர்ந்து சர்வதேச நாடுகளில் போரின் விளைவுகளையும், போர்க்குற்றங்களையும் இனவழிப்பையும் தமிழ் மக்களின் தற்சமய அவல நிலைமையையும் மறைத்து பல்லாயிரக்கணக்கான நிதியை கொட்டி சுற்றுலாதுறைக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் சென்ற வருடம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சிறீலங்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டவர்கள் அதிகமாக வெளிநாட்டவர்களாக இருந்தாலும் புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கவில்லை.
அந்தவகையில் சிறீலங்கா தனது சுற்றுலாதுறையை மேம்படுத்தி வெளிநாட்டவர்களின் சிறப்பாக புலம்பெயர் தமிழ்மக்களின் வருகையை ஆவணப்படுத்தி தனது அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்துவது தெளிவாகிறது.
தமிழர்களுக்கான எவ்வித நீதியும் மற்றும் அரசியல் தீர்வும் எட்டப்படாது தொடர்ந்தும் தமிழர்களின் இருப்பை துண்டாடும் நோக்கத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் சிங்கள இனவெறி அரசின் பொய்முகத்தை கிழித்து தாம் வாழும் நாடுகளில் சிறீலங்காவின் சுற்றுலாதுறைக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்யும் படி கேட்டுக்கொள்வதோடு, புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாமும் ( தவிர்க்க முடியாத காரணங்களை தவிர) சிறீலங்காவை புறக்கணிப்போம் ஜெர்மனியின் ஈழத்தமிழர் மக்கள் அவை கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment