ஐ.நா
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டு வந்த தீர்மானம்
வெற்றிபெற்ற கையுடன், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்கா
வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான
முறைப்படியான திட்டம் ஒன்றையும் கூடிய விரைவில் உருவாக்குமாறும் அமெரிக்கா
கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, வொசிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் நாம் கேட்டு வருவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இலங்கை அரசாங்கம் தமது மக்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதே அனைத்துலக சமூகத்தின் கேள்வியாக உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் “கூடிய விரைவில்“ நடைமுறைபடுத்த வேண்டும். இதனை நாம் முன்வைத்து பல மாதங்களாகக் கோரி வந்துள்ளோம்.“என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment