Tuesday, March 06, 2012

இலங்கை பெண்ணை அழைத்து வந்த இராமேஸ்வர மீனவர்கள் கைது


கச்சத்தீவில் நடந்த அந்தோனியார் கோவில் திருவிழாவுக்கு சென்ற தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை பெண்ணையும் அவரது குழந்தையையும் இராமேசுவரத்துக்கு படகில் அழைத்து வரப்பட்டதினால் இராமேசுவரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




நேற்று முன்தினம்   கச்சத்தீவில் நடந்த அந்தோனியார் கோவில் திருவிழாவுக்கு சென்ற இராமேஸ்வர மீனவர்களின் படகில்,   இலங்கையைச் சேர்ந்த     உஷா (வயது 34), அவரது மகள் நிரா (4) ஆகியொரை, இலங்கைக் கடற்படையினரை சேர்ந்த சிலர், இராமேஸ்வரத்துக்கு செல்லுமாறு மீனவர்களின் படகில் ஏற்றி வைத்துள்ளனர்.
இராமேஸ்வரம் வந்த அவர்கள் இதியாவுக்குள் பாஸ்போர்ட்டு மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்திய பகுதிக்குள் வந்ததாக இராமேஸ்வர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை இந்திய பகுதிக்குள் அழைத்து வந்த இராமேசுவர மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட உஷா மற்றும் அவரது குழந்தை நிரா ஆகியோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு திருச்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் 5 பேரும் இராமேசுவரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் வற்புறுத்தலின் பேரினாலேயே அவர்களை தமிழக மீனவர்கள் ஏற்றி வந்துள்ளனர் எனவே, மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment