Tuesday, March 27, 2012

ஜெனிவா தீர்மானத்துக்காக கடுமையாக உழைத்தது பிரித்தானியா - ஜெரிமி பிறவுண்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பிரித்தானியா வரவேற்றுள்ளதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று லண்டனில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண்,



"ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரின் முடிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முடிவைப் பெறுவதற்காக பிரித்தானியா கடுமையாக உழைத்தது.

சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம்.

உலகில் உள்ள அரசாங்கங்கள் சிறிலங்காவில் நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகின்றன என்பதை இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சாத்தியமானளவுக்கு - கூடிய விரைவில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment