Tuesday, March 06, 2012

இலங்கையில் எண்ணெய் வளம்! சுரண்டத் துடிக்கும் இந்தியா!!


மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் முழுவதையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தத் தகவலை சென்னையில் இருந்து வெளியாகும் இந்து நாளேடு வெளியிட்டுள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இந்த எண்ணெய் வளத் துண்டங்கள் இருப்பதால் அவற்றை வேறு நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க இந்திய விரும்பவில்லை.


இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளினதும் எண்ணெய் வள அமைச்சர்கள் இந்தமாதம் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பேச்சுகள் வெற்றி பெற்றால் மீண்டும் ஒக்ரோபரில் மற்றொரு பேச்சு இடம்பெறும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட அகழ்வு ஆய்வின் போது வாயுப் படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு ரஸ்யா, சீனா, மலேசியா, மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன.

இந்த நாடுகள் இதுபற்றி சிறிலங்காவுடன் முதற்கட்டப் பேச்சுகளிலும் ஈடுபட்டுள்ளன.

ரஸ்யா, மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகள் இந்தியாவின் நட்பு நாடுகளாக இருந்தாலும், சீன நிறுவனங்கள் இங்கு கால்பதிப்பதை புதுடெல்லி விரும்பவில்லை என்றும் இந்து நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment