ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய மனித உரிமைகள் தீர்மானத்தில்
ஆதரவளித்து வாக்களித்தமைக்காக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்திய
பிரமதர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்டார் என்பதற்காக நான்
வெட்கப்படுகிறேன் - என்று ராஜஸ்தான் ஜெயப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப்
போராளியான கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாகயமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில்
இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமின்மையும் சிறுபான்மையனிரும் என்ற தலைப்பில் பேசும் பொழுது ஈழத்து மக்களுக்கு எதிரான இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு தான் வெட்கப்படுதாக கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார்.
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறலுக்காக இந்தியாவின் சார்பாக அளிக்கப்பட்ட வாக்கிற்கு பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடித்தில் மன்னிப் கோரியுள்ளார். இந்த நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமை குறித்த அக்கறையும் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் வெட்கப் படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார் ம கவிதா சிறிவஸ்றவா.
No comments:
Post a Comment