தமிழ்நாடு
பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை அகதி ஒருவர் கடந்த முதலாம் திகதி
தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது
குறித்து இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு, இலங்கையை
சேர்ந்தவர் ஜெயமோகன் (29 வயது). 2007ம் ஆண்டு முதல் செங்கல்பட்டு அகதிகள்
சிறப்பு முகாமில் இருந்து வருகிறார்.இங்கு ஏற்பட்ட கலவரத்தின்போது ஜெயமோகன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மாற்றப்பட்டு பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் 2010ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1ம் திகதி முதல், தன்னை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி அகதிகள் முகாமிலேயே ஜெயமோகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பூந்தமல்லி தாசில்தார் வளர்மதி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை ஜெயமோகன் கைவிடவில்லை. மேலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் ஜெயமோகன் மறுத்து விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment