Thursday, March 22, 2012

யாழ்ப்பாணத்தில் இன்று படையினரின் சாகச நிகழ்வுகள்! பீதியில் யாழ் மக்கள்!

heli2யாழ்.துரையாப்பா விளையாட்டரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் முக்கியமாக உலங்குவானூர்தி மூலமாக மேற்கொள்ளப்பட்ட சாகச நிகழ்வுகள் யாழ்ப்பாண மக்களை அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாக்கியுள்ளது.
இன்று மதியத்திற்குப் பிறகு யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் இடம்பெற்ற உலங்குவானூர்திகளின் நடமாட்டம் போர்க் காலத்தை நினைவுட்டியுள்ளது. உலங்குவானூர்தியிலிருந்து பாரசூட் முலமாக படையினர் தரையிறங்கும் நிகழ்வுகளும்நடைபெற்றன.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அமெரிக்கா கொண்டு வந்துள்ளதீhமானம் நிறைவேற்றப்படும் என்கிற கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையிலும்,இவ்வாறு ஒரு தீhமானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்படும் என்று சிறிலங்காவின் கடும்போக்கு அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையிலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள படையினரின் சாகச நிகழ்வகள் மக்கள் மனங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்க்கதாகும்.Posted by Nilavan on March 21st, 2012

No comments:

Post a Comment