சிறிலங்காவுக்கு வருமாறு, மகிந்த ராஜபக்ச அரசினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்னமும் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழின் செய்தியாளர் ஒருவர் ஜெனிவாவில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் குறிப்பேட்டில் இந்த அழைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளதாக சிறிலங்காவின் பதில் வெளிவிவகார அமைச்சர் டியு குணசேகர சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேசமயம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மட்டுமே இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதா என்பதையிட்டு அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் யாப்பா - ஐ.நா தூதுக்குகுழு நாட்டுக்கு வரும் போதுதான் இது தொடர்பில் ஒரு தீர்மானத்தை சிறிலங்காவின் அரசாங்கம் எடுக்கும் எனவும் கூறியுள்ளர்.
No comments:
Post a Comment