இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் எமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீது எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் களுத்துறை பண்டாரகமவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில்; அதர்மத்துக்கு தலைசாய்ப்பதை விட நீதிக்காக உயிர் துறப்பது எவ்வளவோ மேலானது. சந்தர்ப்பவாதிகளின் சதிக்கு இரையாகாமல் எமது பிரச்சினை கள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும். மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் உள்ள47 நாடுகளில் எமக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஏனைய 24 நாடுகளே அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இவ்வாறு இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் எதிர்காலத்தில் தோன்றும் பயங்கரவாதம் குறித்து அக்கறையுடனும் அவதானத்துடனும் இருக்கவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ எச்சரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment