இக் கருத்தரங்கில் ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்காற்றிய நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் வளஅறிஞர் பங்கெடுத்திருந்த பேராசிரியர் போல் நியுமன், ஐ.நா
மனித உரிமைச் கூட்டத் தொடரில் ஜெனிவாவில் பரப்புரையில் ஈடுபட்ட அவைத்தலைவர்
பொன் பாலராஜன் ஆகியோர் நேரடியாக பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து
கொண்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி காணொளியூடாக பங்கெடுத்து கருத்துக்களை வழங்கியிருந்தார்.
பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில் ,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவின் நல்லிக்க ஆணைக்குழுவினை ஏற்றுக்
கொள்ளவில்லை. நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைச் சபை தீர்மானத்தை ஒரு
கருவியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயன் படுத்தும். இதற்காக மற்றைய
தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாயும் அதற்கான
முனைப்பில் தற்போது ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
ஈழத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை
தேவை என்பதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா. ஐ.நா செயலாளர் நாயகதம்
பங்கி மூன் க்கு வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பிப்பதாயும் அதற்கு 20
லட்சடத்துக்கும்; மேற்பட்டவர்களின் கையெழுத்துக் கோரிக்கை இருப்பதாகவும்
தெரிவித்தார். மேலும் தமிழினப் பாதுகாப்பிற்காக சர்வதேசப் பொறிமுறையின்
அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் பொல் நியுமன் அவர்கள் கருத்துரைக்கையில் , தமிழர் பொது
அமைப்புக்கள் பிரிந்து நின்று செயற்படுவது செயற்பாட்டைப் பலவீனப்படுத்தி
விடும் எனவும் ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அவசியம் பற்றியும்
தெளிவாகப் பேசியதுடன் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியின் பின்னர்
சர்வதேச அணுகுமுறையில் ஏற்பட்ட மாறுபாடு எவ்வாறு சிறப்பாக 19ம் மனித
உரிமைக் அவையில் தமிழினப் படுகொலைபற்றிய கருத்துருவாக்கம் பெற்றது
என்பதனைக் கால அட்டவணை போட்டு காட்டியிருந்தார். தமிழ் இனப் படுகொலையினைப்
பற்றிய கருத்துருவாக்கம் இன்று தீர்மானமாக 19ம் மனித உரிமை அவையில் மாறியது
பற்றியும் தெளிவு படுத்தியிருந்தார்.
பேராசிரியர் போல் நியுமன் ஐ.நா. மனித உரிமைச் சபையில் தன்னுடன்
பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசின் வளஅறிஞர் குழுவின் பிரித்தானிய
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் - ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்களின்
பங்கு ஆகியனவற்றையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
அவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் கருத்துரைக்கையில் , ஜெனிவாவில்
சிறீலங்கா அரசாங்கம் எவ்வாறான பிரச்சார யுக்திகளைக் கையாண்டார்கள் என்பதனை
ஆதாரபூர்வமாக விளங்கப் படுத்தியிருந்தார். மேலும் சிறீலங்கா அரசாங்கத்தின்
பிரச்சார யுக்திகளை தெரிந்து அதற்குப் பதிலாக எதிர்ப்பிரச்சாரத்தை
முன்னெடுத்த விதங்களையும் மற்றைய சக சகோதரத் தமிழ் அமைப்புக்கள் ஆற்றிய
பங்குகள் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். இந்த ஐ.நா. அமர்வில்
கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் வரப்போகும் நாட்களில் தொடர்ந்தும்
தமிழினப் படுகொலையினை விசாரிப்பதற்காக சர்வதேச சுயாதீன விசாரணைப்
பொறிமுறையின் அவசியத்தினையும் வேலைத் திட்டங்களையும் விளக்கியிருந்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகையில் தமிழின அழிப்பைத் தடுத்து
நிறுத்துவதற்கான பாதுகாப்புப் பொறிமுறையினை சர்வதேசத்தின்
மேற்பார்வையில் உருவாக்க வேலைகள் மும்முரமாக நடைபெறவுள்ளதாயும் இலங்கையில்
நடைபெற்றது ஒரு இன அழிப்பு என சர்வதேச நிபுணர்கள் மூலம் உலகத்திற்கும்
சர்வதேசப் பல்கலைக் கழக சமூகத்திற்கும் தெளிவு படுத்துவதற்கான
முன்னெடுப்புகள் இடம் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
பிரதிநிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, மக்களின் கேள்விகளுக்கு விளக்கவுரைகள்
வழங்கப்பட்டதோடு, மக்கள் தங்களுடைய கருத்துக்களையும் ஆர்வத்துடன்
பகி;ர்ந்து கொண்டிருந்தனர்.
சமூக ஆர்வலர் கேதா நன்னித்தம்பி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற
இக்கருத்தரங்கினை, உறுப்பினர் வின் மகாலிங்கம் அவர்கள் அறிமுகவுரையினை
வழங்கி, நின்றியுரையுடன் நிறைவு செய்து வைத்தார்.
|
No comments:
Post a Comment