
பெண்கள் தினத்தில் கண்விழிக்கும் உலகப்பெண்ணினமே!
எம்மினத்தை எம்மண்ணில் கண்கொண்டு பாருங்களேன்.
மண்ணிழந்து போனதினால் தன்மானம் இழந்தவராய் - மண்ணிலே
மனிதரென்ற நிலையிழந்து தவியாய்த் தவிக்கின்றனரே
பெற்றாரை இழந்ததினால் பேதலித்து சிறுமியரும் - தாம்
பெற்றவரைப் பிரிந்ததினால் பிதற்றிடும் பெற்றாரும் - வாழ்வில்
முற்றும் இழந்து முட்கம்பியினுள் கிக்குண்டதால் வெற்றுடலாய்
பற்றற்று பரதவிக்கின்றனரே பாவியராய் தம்வாழ்வின் பாதையிலே
மங்கைப்பருவத்து தம்மங்கையரை தொலைத்த மனங்கள்பல
மனங்கலங்கித் தவிக்கின்ற மனநிலைமையினை காணுங்களேன்
கங்கையென மங்கையர்கள் வடிக்கும் இரத்தத்கண்ணீரைத் துடைத்து
என்றுதான் எம்பெண்கள் நிம்மதியைக் காண்பரோ நிலத்தினிலே?
தங்கையரைத் தொலைத்ததனையர்களோ தன்கை இழந்தவராய்
தன்மானமும் இழந்தவராய் தவியாய்த்தவித்து - தமிழ்த்தாய்பெற்ற
மங்கையரை அரசு தங்கவைக்கும் இடமெல்லாம் மனம்தளராது
தேடித்தேடியலைந்து தவிக்கின்ற தவிப்பினைப்பார் பாரே! பாரே!!
பாலன் என்றும் பாராது பாவியரால் பரிதாபமாக சீரழிந்து
படுகொலையாகின்ற கொடுமையினைக் காண்கையிலே - தம்யும்பார்
கோலமழிந்து குற்றுயிராய் தினம்தினம் கொடியவரின் பிடியில்சிக்கி
குமுறுகின்ற பெண்மனங்களை சிறையினிலே பார் எண்ணிப்பார்
(கவிவன்)
Internationaler Frauentag 2012
8. März 2012, 17°° Uhr
Weltzeituhr Alexander Platz- Berlin
தொடர்புகட்கு : பெண்கள் கூட்டமைப்பு - யேர்மனி

No comments:
Post a Comment