Monday, March 05, 2012

எங்கள் தலைவரைப்பற்றிக் கதைப்பதற்கு சுரேஷிற்கு என்ன அருகதையுள்ளது? - முல்லை மக்கள் ஆவேசம்



தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியமையால் முல்லைத்தீவு மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
தலைவர் பிரபாகரன் எங்கள் உயிர். அவர் உயிரோடு இருக்கிறாரென்றே நாங்கள் இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தலைவர் இறந்துவிட்டார் என்று கூறுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் யார்? இவர் கூட்டமைப்பின்
பேச்சாளரா அல்லது எங்கள் தலைவர் பிரபாகரனின் பேச்சாளரா? எங்கள் தலைவரைப்பற்றிக் கதைப்பதற்கு சுரேஷிற்கு என்ன அருகதையுள்ளது? என்று முல்லைத்தீவு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான பிpரச்சார நடவடிக்கைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பமாகின. முல்லைத்தீவு முள்ளியவளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று ஆரம்பமாகி நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்று  சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
“அன்று வெள்ளையர்களுடன் போராடி பண்டாரவன்னியன் வீரச்சாவடைந்ததும்இ இன்று சிங்களவர்களுடன் போராடி பிரபாகரன் வீரச்சாவடைந்ததுமான வீரம் செறிந்த இந்த மண்ணில் நின்று நான் உங்கள் மத்தியில் உரையாற்றுகின்றேன்”; என்று சுரேஷ் பிமேச்சந்திரன் தனது உரையைத் தொடங்கினார். இவர் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் கூட்டத்திலிருந்த மக்கள் கொதிப்படைந்தனர்.
தமிழ் மக்களின் உயிர் மூச்சாகத் திகழ்ந்த - திகழ்கின்ற தமிழீழ தேசியத் தவைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள இனவெறியையே சிதறடித்தவர். எவருக்கும் அஞ்சாத ஒப்பற்ற தலைவர். வல்லரசுகளுக்கே விலைபோகாத வேங்கை. இறுதி யுத்தத்தின் பின்னர் தலைவர் இறந்துவிட்டாரென்று சிங்கள தேசம் சர்வதேச ரீதியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றே நாங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகள் இறந்தபோதும் போராட்டம் அழிக்கப்பட்டபோதும் வாய்மூடி மௌனியாக இருந்த பிரேமச்சந்திரன் இன்று எமது தலைவருக்கு இறப்புச் சான்றிதழ் தரவா இங்கு வந்தார் என்றும் முல்லை மக்கள் வெகுண்டனர்.
இதேவேளை யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற நிலையில் இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழர் பிரதிநிகளோ தேசியத் தலைவர் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காத நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏன் இவ்வாறு கூறினார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு உரையாற்;றிய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாஇ வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறீதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment