Sunday, April 01, 2012

சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு ஏப்ரல் 16-ல் இலங்கை செல்கிறது!

தமிழர்களின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16-ல் இலங்கை செல்லவுள்ளது. அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்பி இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இலங்கையில் ஈழப்போர் முடிந்து பல வருடங்கள் ஆகியும் அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரம் புனரமைக்கப்படாமல் இன்னும் முள் வேலிக்குள் அடைக்கப்பட்டு அகதிதளாகவே அவர்கள் வாழ்ந்து வரும் அவல நிலை நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

அங்குள்ள தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவதாக இருந்தது. ஆனால் இங்கு நடந்த 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 5 மாநில தேர்தல்கள் முடந்த நிலையில் மத்திய அரசு அடுத்த மாதம் (ஏப்ரல்) அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை பயணத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.
இந்த குழுவிற்கு பி.ஜே.பி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தலைமை ஏற்கிறார். இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது-
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினராகிய நர்ஙகள் அடுத்த மாதம் 16-ந் தேதி புறப்பட்டு செல்கிறோம். 21-ந்தேதி திரும்புகிறோம். மேலும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை என்னுடன் வரும் குழு உறுப்பினர்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் ஆய்வு செய்கிறோம். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

No comments:

Post a Comment