Thursday, April 26, 2012

அச்சம் தொடரும் வாழ்க்கை!- தமிழீழத்திலிருந்து சர்மா-

srilankan-armyதனக்கென்று ஓர் பாரம்பரியம,பண்பாடு, கலை, கலாச்சாரங்களைக் கொண்டதாகவும் ,கல்வியாற்றலில் உலகம் வியக்கத்தக்க வகையில் மிளிர்ந்த எம் தமிழினம் இன்று சகல தாற்பரியங்களையும் விழுமியங்களையும், இழந்த நிலையில் பிறந்த உறவுகளைப் பிரிந்து ஏக்கத்துடன் களையிழந்து சோபையிழந்து எதிர்காலம் கேள்விக்குறிகளுடன் விடை தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றது.
சிறீலங்கா ஓர் ஜனநாயக நாடு எனப் பெயரளவில் சொல்லப்படுகின்றதே தவிர இங்கு வாழும் குடிமக்கள் எவரும் முழுமையான சுதந்திரத்தினையும், அவரவர்க்குரிய உரிமைகளையும் அனுபவிக்கின்றார்களோவெனில் அது கேள்விக்குரியதாகவும் கேலிக்குரியதாகவும் மட்டுமே உள்ளது.

அந்நாட்களில்; இருந்தே தமிழ் மக்கள் மீது பேரினவாதிகளால் அடக்கு ஒடுக்கு முறைகள் பல தடவைகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டதாலும், உரிமைகள் மறுக்கப்பட்டமையாலும் கொதித்தெழுந்த இளம் சந்ததியினர் போராட்டங்களில் இறங்கி அது வன்முறைகளாக விரிவாக்கம் பெற்று மோசமான உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்து இறுதியில் நாட்டினில் முக்கியமாகத் தமிழர் வாழ் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி மீதமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தினரை ஏதிலிகளாகவும் அங்கவீனர்களாகவும் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் மாற்றியமைத்ததுடன் எதிர்காலம் பற்றிய சிந்தனைக்கே சற்றேனும் சிந்திக்க முடியாத நிலைக்குப் பாதாளக் குழியில் தள்ளிவிட்டுள்ளது.

பன்னாட்டு மனிதநேய அமைப்புகளின் கணிப்பீட்டின் படி 2009இல் மனிதநேய நடவடிக்கை எனும் பெயரில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் இறுதியில் ஆகக்குறைந்தது எண்பதாயிரம் மக்களாவது கொல்லப்பட்டனர் (காணாமற் போனோர் உட்பட) எனப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாகவும் இணையத் தளங்களின் ஊடாகவும் அறியவந்துள்ளது.
ஆனால், இதனை மறுத்துவரும் அராஜக அரசின் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதி ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்தவாரமும் கூடக் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் “இறந்தவர்களின் எண்ணிக்கை தவறாக இருக்கும். நாங்கள் தற்சமயம் இறந்தவரின் தொகையைக் கணிப்பிட அரச ஊழியர்கள் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதமும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபராகவுள்ள திருமதி இமெல்டா சுகுமார் வடபகுதியில் மட்டும் 27000 பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் எனப் பகிரங்கமாகச் செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். இதனூடாக இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் தொகையினையும் ஓரளவாவது ஊகித்துக் கொள்ள முடியும். இவற்றினை விடக் காணாமற்போனோரின் பட்டியல் நீண்டு செல்கின்றதே தவிர அதற்கு ஓர் முடிவுமில்லை. விமோசனமுமில்லை.
போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால்இ பாதிப்புக்குள்ளானவர்களின் மனக்குமுறல்களஇ; வேதனைகள்இ வலிகள் இன்னமும் ஓயவில்லை. அடங்கவில்லை.
காணாமற்போனவர்கள் இருக்கின்றார்களா இல்லையா எனத் தினமும் கண்ணீர் வடித்தபடி உறவுகளுக்காய் ஏங்குபவர்கள் ஒருபுறம், தடுப்பில் உள்ளவர்களை எப்போது விடுவார்கள் என ஏங்கித் தவிப்பவர்கள் ஒருபுறமும், மடிந்தவர்களை எண்ணித் தமக்கு ஆதரவளிக்க எவருமேயில்லையெனக் குமுறுயழுபவர்கள் ஒருபுறமும், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகத் தமது சொந்த வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்காமையால் எங்கெங்கெல்லாமோ தற்காலிகமாகத் தங்கியிருந்து கொண்டு போதிய வருமானமும் இன்றி வாழ்வாதாரத்துக்கான வழிவகையுமின்றிப் பரிதவிக்கும் மக்கள் கூட்டம் ஒருபுறமும் என இன்றும் அவலத்திலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1995களில் தொடங்கிய சிறீலங்கா இராணுவத்தின் பிரசன்னம் யாழ்ப்பாணத்தில் அன்று தொடக்கம் தனது அடக்குமுறைக் கலாச்சாரத்தைப் படிப்படியாக விரிவாக்கி 2009இன் பின்னர் வடக்குக் கிழக்கு முழுவதிலும் கால்பரப்பி நின்று தன் ஆதிக்கத்தைக் காட்டிய வண்ணமுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களையும் அடிக்கடி விசாரணை என அழைப்பதும் அவர்களைப் பரிகாசம் செய்வதும் தற்பொழுது இராணுவப் புலனாய்வினருக்கு ஒரு பொழுதுபோக்காக உள்ளது. ‘சிங்கத்திற்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர் போகுது’ என்பது போல இராணுவப் புலனாய்வினர் இப்படியாக அவர்களை அழைத்து விசாரிப்பதனால் அவர்களுக்கு இரங்கி வேலைவாய்ப்புக் கொடுக்க முன்வருபவர்கள் மற்றும் அவர்களது கஸ்ர நிலைமை கண்டு உதவி செய்பவர்கள் இவர்களுக்கு உதவி செய்வதால் தமக்கும் ஏதாவது இராணுவத்தினரால் துன்பம் விளையுமோ எனப் பயந்து உதவி செய்யாது ஒதுங்கிவிடுகின்றனர். பாவம் இதனால் ஒட்டுமொத்தத்தில் பாதிப்படைபவர்கள் அந்த முன்னாள் போராளிகளே.
இதைவிடப் பல திருமணமான ஆண்களும் இளைஞர்களும் பல ஆண்டுகளாக எதுவித குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களுமின்றிச் சிறைச்சாலைகளில் கிடந்து அவதியுறுகின்றனர். ஆதாரங்கள் எதுவுமில்லாமல் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் பொலிசாh.; சிறைகளில் இ;வ்விதம் கிடந்து வாடுபவர்கள் எத்தனையோ தரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.
இவர்களில் ஆண்களும் பெண்களும் உளர். அவர்கள் உண்ணாவிரமிருக்கையில் அதிகாரிகளால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்படும். பின்னர் அவை காற்றோடு பறந்துவிடும். ஒட்டுமொத்தத்தில் இதற்கெல்லாம் அரசதரப்பில் இருந்து கிடைக்கும் பதில் “நாங்கள் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளோம். அது கிடைக்கும் வரையில் எம்மால் எதுவும் முடியாது” என்பதேயாகும். இப்படிக் கூறியே எத்தனை வருடங்களைக் கழித்துவிட்டார்கள். குற்றமெதுவும் புரியாதவர்கள் எதிலும் சம்பந்தப்படாதவர்களை வெறுமனே ஆதாரங்களெதுவும் இன்றிச் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் வழக்கும் தொடுக்காது பிணையிலும் விடாது வைத்து துன்பத்துக்குள்ளாக்கின்றனர்.
அத்துடன் மட்டும் நின்றுவிடாது அவர்கள் மீ|து சிறைச்சாலைக்குள்ளேயே வைத்து சிங்களக் காடையர்களால் எத்தனையோ தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இ;வ்வாறாகப் பல சொல்லொணாத் துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு மென்மேலும் சோதனைகளும் வேதனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதே தவிரக் குறைந்த பாடாகவில்லை.
சிலரின் காணிகள் படையினரால் தமது தேவைக்கெனச் சுவீகரிக்கப்படுகின்றன. யாரை? யார் கேட்பது? அப்படி எவராவது அது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் பின்னர் அவர்களைக் காண்பது அப+ர்வம். அதற்குத் தான் வெள்ளை வான் கலாச்சாரம் என்று ஒன்று இன்று நாடெங்கிலும் விரிவடைந்திருக்கிறதே.
எங்கும் அச்சம்.! எதற்கும் அச்சம்! அச்சவுணர்வுடனேயே மக்கள் பகலிலும் உலாவுகின்றனர். இரவில் சொல்லவே தேவையில்லை. வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர்.
இவை ஒருபுறமிருக்கஇ பிற நாட்டு நிதி உதவியுடன் இங்கு பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் வீட்டுத் திட்டம்இ ஜீவனோபாய உதவி வழங்கும் திட்டம்இ விவசாய உதவித் திட்டம் எனப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல உதவித் திட்டங்களை அமுல்செய்கின்றன.
அதிலும் கூட ஊழலே நடைபெறுகின்றது. உதவித் திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு நேர்மையான வகையில் தேர்வுப் பிரமாணத்திற்கமைவாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதிலும் அரசாங்கத்ததுடன் இணைந்து செயற்படும் ஒட்டுண்ணித்தரப்புகள் மற்றும் எடுபிடிகளின் தலையீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் பயனாளிகள் தெரிவிலும் மோசடிகள் நடைபெற்று, பயன்பெற வேண்டிய முன்னுரிமைக்குரிய பயனாளி ஒதுக்கப்பட்டு விடுகின்றனான். இ;வ்வகையான தவறுகளினால் உதவித் திட்டங்களின் இறுதியில் அவற்றின் பின்விளைவுகள் பயன் ஏதுமின்றிப் போகின்றன.
ஒருதிட்டம் வெற்றியளிப்பதும் தோல்வியடைவதும் அதன் பயனாளிகள் தெரிவைப் பொறுத்திருக்கின்றது. அதாவது பசியுள்ளவனுக்குத்தான் உணவு கொடுக்க வேண்டும். பசியின்றி ஏப்பம் விடுபவனுக்கு உணவு வழங்கினால் அது வீண்விரயமே. இதுபோன்றதே பயனாளிகள் தெரிவு என்பதும். சரியான முறையில் முன்னுரிமை அடிப்படையில் தேர்வுப் பிரமாணங்களுக்கமைவாகப் பயனாளிகளைத் தெரிவு செய்தால் மட்டுமே அத்திட்டத்தினால் பலன் உண்டு. மேம்பாடும் உண்டு.
இவற்றையெல்லாம் நன்கறிந்தவர்கள் தெரிந்தவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் உரிய இடங்களில் அதனை வெளியிடத் தயங்குகிறார்கள். ஏன்? அரசையோ அல்லது அரசு சார்ந்த படைத்தரப்பினரையோ மற்றும் ஏனையோரையோ எதிர்த்துக் கூறுபவர்களுகு;குக் கிடைக்கும் பெயர் என்ன தெரியுமா? புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள். இதுவே இன்று அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம். எதையும் பொருட்படுத்தாது எதிர்ப்புத் தெரிவிக்க முனைபவர்கள் எவரையும் நிச்சயமாக காணாமற் போனவர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம். அதில் மாற்றமெதுவும் இ;ல்லை. இக்கொடுமைகளையெல்லாம்
- தமிழீழத்திலிருந்து சர்மா-
Posted by Nilavan on April 25th, 2012 
Source: sankathi.com

No comments:

Post a Comment