தனித் தமிழீழத்துக்காக ஐநாவில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் காஷ்மீருக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனித் தமிழீழம் அமைய ஐநாவில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு, காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தலாம். தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசிடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க குறிப்பிட்டார்.
Sunday, April 22, 2012
தனி ஈழத்திற்கு முன்பு தனிக் காஷ்மீருக்கு இந்தியா வாக்கெடுக்க வேண்டும்
தனித் தமிழீழத்துக்காக ஐநாவில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னர் காஷ்மீருக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனித் தமிழீழம் அமைய ஐநாவில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பு, காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தலாம். தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசிடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஷ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment