Wednesday, April 11, 2012

சுனாமி எச்சரிக்கை முற்றிலும் வாபஸ்

கடல் அலைகளில் மாற்றமின்மை மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான குறைந்த பட்ச வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக, சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் முற்றிலும் வாபஸ் பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில், கடல் அலைகளில் மாற்றமின்மை மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான குறைந்த பட்ச வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக, சுனாமி எச்சரிக்கை முற்றிலும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சுனாமி ஆபத்து முற்றிலும் நீங்கியுள்ளது.

No comments:

Post a Comment