மதுரையில்
வரும் 28 நாள் ஆரம்பமாகவுள்ள பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள்
மாநாட்டில், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்
என்று வலியுறுத்தப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவரான
பி.முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
”சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளவர்களை மட்டுமல்ல இந்திய தேசம் முழுவதையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
சிறிலங்காவில் பலமான ஒரு அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
அதேவேளை, அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தவொரு பாரபட்சங்களும் காட்டப்படக் கூடாது.
சிறிலங்காவில் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்களுடன் தொடர்புபட்டவர்களை அடையாளங் கண்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தையும் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் சமப்படுத்திப் பார்க்கக் கூடாது.
பாரதீய ஜனதா கட்சியின் இரு நாள் மாநாட்டில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்பான பிரச்சினையும் ஆராயப்படவுள்ளது.
இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் நலன்களில் அக்கறை காட்டத் தவறியுள்ளது.
சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் சிறிலங்கா செல்லும் நோக்கம் தொடர்பில் தமிழ்நாட்டின் பிரதான இரு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அவை கருத்திற் கொள்ளப்படவில்லை.
சிறிலங்கா பயணத்தின் அவசியம் தொடர்பாக, தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளுக்கும் இந்திய மத்திய அரசு புரிய வைக்கத் தவறியுள்ளது.
தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் சிறிலங்கா பயண நோக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த போதிலும், இவர்களின் கோரிக்கைகள் கருத்திலெடுக்கப்படாது, இந்திய மத்திய அரசு தனது நாடாளுமன்ற பிரதிநிதிகளை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment