Sunday, April 15, 2012

ஓர் போர்க்குற்றவாளிக்கு கைகுலுக்க போகின்றீர்கள் : பாலஸ்தீனிய அதிபருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !


மகிந்த ராஜபக்சவுடன் நீங்கள் கைகுலுக்கும் போது, ஒரு போர்க்குற்றவாளியு டன் தான் கைகுலுக்குகின்றீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்பு கின்றேன். இவ்வாறு உத்தியோகபூர்வ பயணமாக , சிறிலங்காவுக்கு செல்லவுள்ள பாலஸ்தீனிய அரசுத் தலைவர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
13-04-2012 ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவுக்கு
செல்லவுள்ள பாலஸ்தீனிய அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட சிறிலங்காவின் அரச தலைவர்கள் பலரையும் சந்திக்க இருப்பதோடு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்யவுள்ளார்.
இந்நிலையில் பாலஸ்தீனிய அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார் என பிரதமர் செயலகத்தில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு நாட்டின் தலைவராக, உங்களுக்குள்ள சுதந்திரத்தைப்  பயன்படுத்தி, சிறிலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றியும்,  தமிழ்ப் பிரதேசங்களில் இடம் பெரும் சிங்களக் குடியேற்றங்களைப் பற்றியும் நீங்கள், ஒரு நாட்டின் தலைவராக உங்களுக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி , உங்கள் கருத்துக்களை கூறல் வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.
தங்களின் சிறிலங்காவுக்கான பயணம், சிறிலங்கா அரசின் மேற்பார்வையில் இடம் பெறுவதனால், நீங்கள் தமிழ் மக்களின் அவலங்களையும், துன்பங்களையும் அறிந்து கொள்வதற்கு வாய்பாக இருக்காது என குறிப்பிட்டுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தமிழ் மக்களைப் கொன்று குவித்த அதே அரச படைகளின் அணி வகுப்பு மரியாதைத் தான், நீங்கள் காணப் போகின்றீர்கள் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1958ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் பல தடவைகள் பெருமளவில் படுகொலை செயப் பட்டு வந்துள்ளதை குறித்து குறிப்பிட்டுள்ளதுடன்,  2009 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாரிய அளவிலான கொலைகளைத் தொடர்ந்து,  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன்அவர்கள், நிபுணர் குழுவொன்றை  அமைத்தனையும், பாலஸ்தீன அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்
ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009 ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 தமிழ் மக்கள் இலங்கையில் படுகொலை செயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால், பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப் பட்ட பிரதேசங்கள் மீது, வேண்டுமென்றே மேற் கொள்ளப்பட்ட பரவலான தாக்குதல்களினால் இப்பாரிய அளவிலான இறப்புக்கள் நிகழ்ந்தன எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில்..
சிறிலங்கா அரசாங்கம் தமிழகளுக்கு உணவு, மருந்து என்பன கிடைக்காமல் தடை செய்தது. அதனால் பலர் பட்டினியால் இறந்தனர். இன்னும் பலர் இரத்தம் வெளியேறியதனாலும் இறந்தனர்.
ஐ நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற கொலைகளும் குற்றங்களும் போர்குற்றங்களுக்கும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் உரிய தன்மை கொண்டவையாகும்.
ஐ. நா. மனித உரிமை பேரவையில் அண்மையில் இப்பாரிய கொலைகளைப் பற்றி ஆராய்ந்து, இந்த அனைத்துலக சட்டங்களின்   அடிப்படையில் இக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிவதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
நிபுணர்களின் தனிப்பட்ட கருத்துப்படி இக்குற்றங்கள் இனப் படுகொலைக்குரிய தன்மைகளைக் இவைகள் கொண்டுள்ளன.
இந்தப் படுகொலைகளை விட, தமிழர்கள் ஆயிரக் கணக்கில் காணாமல் போயுள்ளனர். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பெருந் தொகையான் தமிழர்கள் பலகாலமாக எவ்வித விசாரணையும் இல்லாமல் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
அத்துடன், கடத்தல்கள் தொடர்கின்றன. தமிழர்கள், அவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் இவ்வாறு இனம் காணப் பட்டு இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படு கின்றார்கள்
சிறிலங்காவின் ஆயுதப் படையில் உள்ளவர்கள் ஏறத்தாழ அனைவரும் சிங்கள இனத்தவர்கள். அதே வேளையில், கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுபவர்கள் அனைவரும் தமிழ் இனத்தவர்கள்
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பலஸ்தீன அதிபர் முஹம்மது  அப்பாஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் செயலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
Tamil News Circle
பிரதமர் வி.உருத்திரகுமாரனினால் அனுப்பி வைக்கபட்டுள்ள கடித்தின் பிரதி :
H.E. Dr. Mahmoud Abbas
President
Palestinian National Authority
Ramallah, West Bank
H.E. Dr. Mahmoud Abbas,
I am writing to you about your upcoming visit to Sri Lanka. We are eagerly looking forward to your visit, and we hope that you will speak about the mass Killing of Tamils by the Sri Lankan Government.
In addition to the killing, thousands of Tamils have disappeared, Tamil women are sexually assaulted and raped, large numbers of Tamils are imprisoned without trial and the abductions are continuing. Tamils are singled out to face these abuses simply and solely on account of their Tamil nationality. The government is also actively organizing large scale settlement of Sinhalese in Tamil areas.
Tamils have faced Sri Lankan government assisted repeated mass killings since 1958. Tamils fled in refugee ships to save themselves during these mass killings. Mass killings continued over the years since 1958 and the killings in 2009 prompted UN Secretary General Ban Ki-Moon to appoint a Panel of Experts to report on the scale of killings.
According to this UN Panel’s report, over 40,000 Tamils were killed in a five months period in 2009. They were killed due to carpet bombing of areas designated as “no-fire zones” by the Government. Hospitals and food distribution centers were also singled out for deliberate and intense bombing and shelling.
Large numbers of people moved into these “no-fire zones” thinking that they would be safe. Instead, they were hunted down by the Sri Lankan forces. Members of the Sri Lankan security forces are almost exclusively from the Sinhalese community and the victims are all from the     Tamil community. The Sri Lankan government also restricted food and medicine to these “no-fire zones,” resulting in large numbers of people dying from starvation and many of the  injured bleeding to death.
Over 300,000 people who fled these “no-fire zones” were locked up in massive internment camps guarded by the Sri Lankan forces. Many were also summarily executed while fleeing these safe zones. People who were in these camps faced sexual assaults, abductions and executions.
According to the UN Panel, the killings and other abuses that took place amount to war crimes and crimes against humanity. The UN Human Rights Council recently looked into this mass killing and passed a Resolution on accountability for these international crimes. Independent experts believe that there are elements of these abuses that constitute an act of genocide. UK’s Channel Four produced two Documentaries documenting these killings with live video shot by the Sri Lankan soldiers as war trophies.
Your State visit will be stage managed by the Government of Sri Lanka to hide all the killings and continuing abuses against Tamils. You will never be able to hear the pain and suffering of Tamils due to intense crackdowns on Tamils to keep them silent.
When you receive the guard of honor, we urge you to remember that the same security forces that are giving you the guard of honor are the same ones that committed mass killings of Tamils and sexual assaults on Tamil women. When you shake hands with the Sri Lankan President and other government leaders, we urge you to remember that you are shaking hands with war criminals.
We urge you to understand our plight and strongly request you to speak up while you are there about the killings and other abuses faced by Tamils. We are confident that you will have opportunities to express your concerns during your meetings with the press and in other places. We urge you to use the freedom you will enjoy as a head of State to speak for those who are unable to speak for themselves. We are confident that you will not miss this opportunity. Thank you.
With kind regards,
Visuvanathan Rudrakumaran
Prime Minister

No comments:

Post a Comment