Tuesday, April 03, 2012

ரைம்ஸ் சஞ்சிகையின் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் நவநீதம் பிள்ளை இடம்பிடிப்பாரா?

time100உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார்.
71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது.


சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்என குறிப்பிட்டுள்ளது.
ரைம்ஸ் சஞ்சிகையின் 100 உலகின் சக்தி வாய்ந்த நபர்களுக்கான வாக்கெடுப்பு,  எதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி வரை இணையத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.html குறித்த இந்த இணைய முகவரிக்குச் சென்று, வாக்களித்து கொள்ள முடியும் என்பததோடு, ஏப்ரல் 17ம் நாள் அன்று ரைம்ஸ் சஞ்சிகையின் 100 நபர்கள் யார் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment