
இலங்கையில் விளையும் ஸபையர் மற்றும் சில மாணிக்கக் கற்கள் கொண்ட ஆபரணங்களையே சுஸ்மா பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இருந்துசெல்லும்போது பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்த ஆவணங்களை இவர்கள் கொண்டு செல்கிறார்களோ இல்லையோ, பரிசுப்பொதிகளை மட்டும் நிச்சயம் கொண்டுசெல்வார்கள். ஒருவேளை எடை அதிகமாக இருந்தால், ஆவணங்களை விட்டுவிட்டு தமது பரிசுப்பொதிகளோடு செல்லவேண்டிய நிலைகூடத் தோன்றலாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பரிசுகள் குவிந்துள்ளதாம் !
இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று தமிழர்களின் நிலையைக் கேட்டறிந்து ஆவனசெய்யும் என மக்கள் நம்பியிருக்க இவர்களோ இலங்கை அரசின் உல்லாச உபச்சாரத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.







No comments:
Post a Comment