தமிழ்நாட்டில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 பேரில், பத்துப் பேரே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்காவில் போரில் இருந்து தப்புவதற்கே தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும், தமக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது குடும்பத்தினர் போரினால் பாதிக்கப்பட்டு, மிகவும் துன்பத்தில் இருப்பதால், அவர்களை தாம் பராமரிக்க வேண்டியிருப்பதாகவும், எனவே, பிணையிலாவது தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மூலம் - பிபிசி

No comments:
Post a Comment