நல்லிணக்க ஆணைக்குழுவின் மும்மொழிவுகள் எல்லை மீறியதாக அமைந்துள்ளதாக
சிறீலங்கா அரசாங்க தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துக்க ளுக்கு ஐரோப்பிய
ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையின்
இறுதிக்கட்ட யுத்தநிலைகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையொன்றை தயாரித்து
வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையானது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லையென்றுதெரிவித்தே நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும் சிறீலங்கா அரசாங்கம் நிபுணர்குழு அறிக்கையையும் நிராகரித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் நிராகரித்தமை சர்வதேச சமூகத்தையும் இலங்கையின் தமிழ் சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்குரிய அரசியல்தீர்வை சிறீலங்கா அரசாங்கம் எவ்வாறு வழங்கப்போகிறது எனவும் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.

No comments:
Post a Comment