
இந்த இரண்டு நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில்
தலையிடுவதாக கருத்தரங்கு ஒன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போன்ற நாடுகளில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரசன்னத்தை குறைக்கவேண்டும். இது நாட்டுக்கு நன்மையை பயக்கும். குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை கனேடிய தமிழர்களிடம் இருந்து நிதியை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, அது ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கிறது. இதன்போது எவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது நம்பிக்கை கொள்ளமுடியும் என்று ஜோன் லால்லேன்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
source:seithy
No comments:
Post a Comment