வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 18ஆம் திகதி வொசிங்டனில்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேச்சுவார்த்தை
நடாத்தவுள்ளார்.
இச்சந்திப்புக்கு நல்லிணக்க முயற்சி தொடர்பான தெளிவானதொரு திட்டத்துடன் தான் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வரவேண்டும் என அமெரிக்க இராஜாங்கச் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் நேற்று முன்தினம் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், வடக்கு மாகாண சபைத் தேர்தல், தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுதல்,அகிய விடயங்கள் தொடர்பாக இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கவே அமைச்சர் பீரிசுக்கு ஹிலாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், வெறுங்கையுடன் பீரிஸ் சந்திப்புக்கு வரக்கூடாதென அமெரிக்கா தரப்பில் இலங்கைக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வரைபு குறித்து அமைச்சர் பீரிஸ் திட்டமிட்டுள்ளார்.
மேலும், பீரிசுடனான சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பவேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்களும் தமிழ் அமைப்புக்களும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment