Wednesday, May 23, 2012

திட்டமிட்ட இனப்படுகொலையை தடுக்க இந்தியா என்ன செய்கிறது? – இந்திய நாடாளுமன்றத்தில் டி.ராஜா. கேள்வி

D.Rajaசிறிலங்காவில் தமிழர்களின் திட்டமிட்ட இனப்படுகொலைகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா. 
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலையை விபரித்து அவர் உரையாற்றினார்.

“சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் முடிவடைந்து மே 18ம் நாளுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஆனாலும், அங்கு இனப்படுகொலைகளும், படுகொலைகளும் மூன்றாண்டுகளாகத் தொடர்கின்றன.
திட்டமிட்ட இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்து ஆலயங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் தமது பாரம்பரியமான வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
சிறிலங்கா இராணுவத்தின் 60 வீதமான படையினர் வடக்கிலேயே நிலை கொண்டுள்ளனர்.
கிழக்கில் நான்கு பொதுமக்களுக்கு ஒரு சிறிலங்காப் படைவீரர் என்ற விகிதத்தில் படைச்செறிவு உள்ளது.
இனப்படுகொலைகள் விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன?
முகாம்களில் இருந்து தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
தமிழ்ச் சமூகம் அழிக்கப்பட்டு வருகிறது.
தமிழர்களின் இனப்படுகொலையைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அனைத்துலக சமூகத்தின் குரலை சிறிலங்கா அரசு கண்டுகொள்வதேயில்லை.” என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment