சிறீலங்கா சோசலிச குடியரசின் அரசியல் யாப்பு ஏற்று அங்கீகரிக்கப்பட்ட
40வது ஆண்டு இன்று அனுஸ்டிக்கப்படுகின்றன நிலையில் யாழ்.
வல்வெட்டித்துறையில் இளைஞர் குழுவொன்று சிறீலங்கா சனநாயக சோசலிச குடியரசின்
அரசியல் யாப்பினை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் என வல்வெட்டித்துறையில்
இருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளின் சிதை அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஊரி இந்து மயானத்திலேயே இந்த அரசியல் யாப்பின் பிரதிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
இன்று மதியம் குறித்த இடத்திற்கு வாகனமொன்றில் வந்திறங்கிய இளைஞர் குழுவொன்றே குறித்த அரசியல் யாப்பின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அரசுக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியவாறு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையினில் மயானத்திற்கு வந்த இளைஞர் குழுவொன்றே அரசியல் யாப்பை தீயிட்டுக் கொளுத்தியதாக சந்தேகங்கள் எழுந்துள்ள போதிலும் சிவாஜிலிங்கம் அதனை அடியோடு மறுத்துள்ளார்.
சிறீலங்கா சோசலிச குடியரசின் அரசியல் யாப்பு ஏற்று அங்கீகரிக்கப்பட்ட 40வது ஆண்டு இன்று அனுஸ்டிக்கப்படுகின்றன நிலையில் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாமல் அவர்கள் அநாதரவாகவே வாழ்ந்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் என செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
1972ம் ஆண்டு இதே நாளன்றே தமிழ் மக்களது எந்தவிதமான பங்களிப்புமின்றி ஒற்றையாட்சியின் கீழான அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டதை ஞாகமூட்டிய கே.சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் சார்பில் தந்தை செல்வா இந்த யாப்பை நாவலர் கலாச்சார மண்டபத்தில் தீக்கிரையாக்கியதையும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பலாபலனுமற்ற குடியரசின் அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டு சுமார் நாற்பது வருடங்கள் கடந்து விட்ட போதும் எந்த விதமான அரசியல் உரிமைகளுமின்றியே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.SOURCE:PATHIU

No comments:
Post a Comment