Monday, May 28, 2012

தன்னால் தான் போரில் வெல்ல முடிந்தது என சொல்லும் உரிமை யாருக்குமில்லை – கோத்தபாய ராஜபக்‌ஷ


gothabaya002தன்னால் தான் போரில் வெல்ல முடிந்தது என எவருக்கும் கூறமுடியாது. தன்னுடைய பங்களிப்பினால் தான் போரில் வெற்றி கிடைத்தது என எவராவது கூறினால், அந்த போர் வெற்றியை உயிர்த் தியாகத்துடன் பாதுகாக்க வேண்டும்.
தன்னால் தான் போர் வெற்றிக்கொள்ளப்பட்டது என பொன்சேகா கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று.

உண்மையில் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் நான் ஊடகவியலாளர்களை திட்டினேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அது எனக்கு ஒவ்வாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னை இராணுவ தளபதியாக நியமித்து, போர் முக்கியமான பகுதியை வழங்கிய ஜனாதிபதிக்கு சிறையில் வழங்கப்படும் காற்சட்டை வழங்க எண்ணும்அளவிற்கு பொன்சேகா எப்படி கடுமையானவராக மாறினார். அத்துடன் போருக்கு கொஞ்சம் கூட உதவி செய்யாதவர்களுடன் எப்படி இணைந்து கொண்டார். அவர் தன்னை மாத்திரமே கவனத்தில் கொண்டு, அதிகார வேட்கையில் செயற்பட்டதால்தான், இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment