இன்று காலை (புதன்கிழமை)
காமன்வெல்த் மன்றம் ஏற்பாடு செய்திருந்த காமன்வெல்த் வர்த்தக கூட்டத்தில்
இனப்படுகொலை அதிபர் ராஜபக்சே ஆற்றயிருந்த உரையை அது ரத்து செய்துள்ளது.
நீண்ட கருத்தாலோசனைக்குப் பின் ஜூன்
6, புதன்கிழமை (இன்று) காலை மேடையேரயிருந்த ராஜபக்சேவின் உரை ரத்து
செய்யப்பட்டதாகவும் அது நடக்காது என்றும் காமன்வெல்த் பொருளாதார மன்ற குழு
தெரிவித்துள்ளது.
மேலும் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்று,
இந்த ரத்துச் செயல் எங்கே மேன்சன் ஹவுஸ் முன்னிலையில் பெரும் போராட்டங்கள்
ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில்தான் என குறிப்பிட்டிருந்தது.
எனினும், இலங்கை அதிபர் அரசியாரை
கவுரவிக்க காமன்வெல்த் பொதுச் செயலாளர் தலைமையில் மால்பாரோ ஹவிஸில் ஏற்பாடு
செய்திருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பில் கலந்துகொள்ளயிருக்கிறார்.
போராட்டங்களும் ராஜபக்சேவிற்கு
எதிர்ப்பு தெரிவித்தலும் தொடர்ந்து மேன்சன் ஹவுஸ் முன்னிலையிலும் மதிய உணவு
விருந்துபசரிப்பு நிகழயிருக்கும் மால்பாரோ ஹவுஸ் முன்னிலையிலும் தொடர்ந்து
நடக்குமென ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், ராஜபக்சே தங்கியிருக்கும் விடுதி முன்புறமும் போராட்டங்கள் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
வெற்றிக்குமரன் தமிழரசி
No comments:
Post a Comment