அனைத்துலக
அகதிகள் நாளினை மையப்படுத்தி, சுவிசில் சமீபத்திய காலங்களில் அகதித்
தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் அகதிகள் விவகாரத்திணைக்கள உயர்அதிகாரியான Ursula
Heizt அவர்கள் கலந்து கொண்டு, அகதி தஞ்சம் கோரும், ஈழத்தமிழ் அகதிகள்
குறித்த, சுவிஸ் அரசின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
வெளிநாட்டவர்கள் விவாகரங்களுக்கான அமைப்பின் பிரதிநிதி Emine Sariaslan அவர்களும் கலந்து கொண்டு, அகதிகள் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரத்துறை அமைச்சர் முத்துக்குமாரசாமி ரட்ணா மற்றும் நா.த.அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான சர்வதேச சட்டவாளர் டேவிட் மத்தாஸ் அவர்களும் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.
சுவிசில் அகதித் தஞ்சம் கோரி, பல்வேறு நிலைகளில் உள்ள அனைத்து தமிழர்களையும் இக்கருத்தாடலில் பங்கெடுத்து பயன்பெறுமானறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜெனீவாச் செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 16ஆம் திகதி, மாலை 17மணிக்கு Johannes Kirchgemeinde, Wylerstrasse 5, 3014 Bern எனும் இடத்தில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

No comments:
Post a Comment