
இந்த ஆர்ப்பாட்டம், தொரொண்டோ
பிரிட்டிஷ் பொது தூதரகத்தின் முன் நடந்துள்ளது. இங்கிலாந்து அரசியான அவர்,
நாட்டின் தலைவர் மட்டுமல்லாது கனடாவின் அரசியாரும் ஆவார்.
ராஜபக்சே போர் குற்றவாளி என
எழுதப்பட்ட எதிர்ப்பு பலகைகளை ஏந்திய தமிழ்மக்கள், தமிழர்களுக்கு எதிராக
நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்தும் போராட்டத்தின்போது முழங்கியுள்ளனர்.
மேலும், பொதுநலவாய நாடுகளில் இலங்கையின் அங்கத்துவத்தை எதிர்த்தும்
கண்டனம் தெரிவித்துள்ளனர் கனடிய தமிழ்மக்கள்.

இதன் தொடர்பாக மேலும் கருத்துரைத்த
ஒருவர், பொதுநலவாய நாடுகளின் பொருளாதார மன்ற கூட்டத்தில் மேடையேர இருந்த
ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டதுபோல் அரசியாருடனான மதிய உணவு
விருந்துபசரிப்பிலும் ராஜபக்சே கலந்துகொள்வதை பொதுநலவாய நாடுகளின்
பொதுச்செயலாளர் கமலேஷ் ஷர்மா தடை செய்திருக்க வேண்டும் என்றுரைத்துள்ளார்.
இதனிடையே, இலங்கை அதிபருக்கு
அழைப்பு விடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவம், ஜெனிவாவில்
எடுக்கப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள்; மனித உரிமை மீறல்கள் தொடர்பான
UNHRC-இன் தீர்மானங்களின் போலி பின்னனியையே குறிப்பதாக தமிழ்மக்கள் மேலும்
குறிப்பிட்டுள்ளனர்.
அதிகலவிளான புலம்பெயர் தமிழர்களைக்
கொண்ட பொதுநலவாய நாடுகளில் ஒன்றான கனடாவில் நடந்த இம்முற்றுகை போராட்டம்,
லண்டனில் வசிக்கும் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை விரிவாக்கும் செயலாக
கருதுவதாக போராட்ட ஒருங்கினைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்குமரன் தமிழரசி
No comments:
Post a Comment