Tuesday, June 05, 2012

சிரியாவுக்கு கிடைத்த கவனிப்பு தமிழின படுகொலைக்கு இல்லை!! தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த வஞ்சகம்?


சிரியாவில் ஒரே ஆட்சியின் கீழ் அமர்த்தப்பட்டவர்களுக்கு இடையிலும் எதிர்தரப்பினருக்கிடையிலும் நடந்த போர், 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை போரைக் காட்டிலும் குறைந்த அளவிலான இழப்பு விகிதத்தைக் கொண்ட ஒன்று. ஆனாலும், சிரியா நாட்டிற்கு எல்லா சக்திகளிடத்தும் மற்றும் ஐ.நா-விலிருந்தும் பெருமளவில் கவனத்தை கொண்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்து கொன்று குவித்த ஈழத்தமிழர்களின் கதை, கண்ணீர் எங்கும் கேட்கப்படவில்லை ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை.
'இனப்படுகொலை ஆட்சியாளர்' ராஜபக்சேவும் அவரது ஆட்சி அமைப்பும் உலக அமைப்புகளால் இன்னமும் பல சலுகைகளோடு சீராக சுமூகமாகவே இயங்கி வருகிறது.
பிரிட்டன் அரசியாரின் வைர விழா கொண்டாட்ட அழைப்பு முதல் தாய்லாந்து புத்தர் கொண்டாட்டம் வரை இன்னமும் அவர்கள் சிறந்தோங்கத்தான் செய்கிறார்கள்.
2009-இல் தமிழ் நாட்டின் செயலிழப்பிற்கும் உலகத் தமிழர்களின் உண்மை குற்றவாளிகளின் முகம் கிழிக்கும் முயற்சியின் தொடர் தோல்விக்கும் இந்த வேறுபாடுதான் காரணமாகிறது என்கிறார் புலம்பெயர் ஆர்வலர் ஒருவர்.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பின்னால் முப்பது ஒற்றை அமைப்புகள் ஒரு கூட்டமைப்பின்பேரில் சர்வதேச ஊடகங்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அமைதியான முறையில் நடந்த போரை மாபெரும் இனப்படுகொலை போராகா முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.
இது ஈழத்தமிழர்களின் இன்னல்களில் அவர்கள் வேறுபாட்டை காட்டுவதனை புலப்படுத்துகிறது.
இது இவ்வாறிருக்க, 'ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை உதவுவதா?' என இலங்கை இனப்படுகொலையின் போது கருணாநிதி எண்ணிடாமல் இருந்திருந்தால், மக்கள் பலம் கொண்ட தமிழ் நாடு, ஈழத்தின் நிலையையே மாற்றியமைத்திருக்கலாம்.
குறைந்தது இப்போதாவது புலம் பெயர் தமிழர்களும் தமிழக தமிழர்களும் அடிமைகளாய் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்ற, இப்பிரச்சனைகளை தீர்க்க திறம்பட நேரடியாக எங்கே முறையிடுவதென்பது தெரிந்திருத்தல் வேண்டும்.
இதனிடையே, சிரியாவின் மீது மனித உரிமை மீறல் விசாரணை தொடுக்குமாறு விசாரணை ஆணையத்திடம் நாற்பத்து ஏழு UNHCR மன்ற உறுப்பினர்களில் நாற்பத்தோரு உறுப்பினர்கள் வாக்களிப்பு நடத்தியுள்ளனர்.
ஆனால், இதே மனித உரிமை மீறல் தமிழர்களுக்கு நேர்ந்தபோது UNHCR என்ன செய்தது? தமிழர்களின் படுகொலைக்கு மூலதனமான ராஜபக்சேவோடு கைகுழுக்கி, வாழ்த்தி, அவரையும் அவரின் அரசியலமைப்பையும் தப்பிக்க வைக்க வழிவகுத்தும் கொடுத்தது.
UNHCR சிரியாவில் நடந்த காரணமானோரை தேடி கண்டுபிடுக்க சுயாதீனமான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
25 மே அன்று நடந்த சுமார் நூற்று எட்டு பேர் பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்ட கொலையை நவநீதம்பிள்ளை மனிதநேய மற்ற கொலை குற்றமென சாடியுள்ளார். இதே தேசிய ஐக்கிய மனித உரிமைகள் மன்றம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமிழ் பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்டு வன்னியில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை எதிர்த்து நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதை மனித நேயமற்ற கொலைகுற்றமென சாடவுமில்லை.
உலகில் நடந்த ஒவ்வொரு இனப்படுகொலைக்கு எதிராக எத்தனையோ அதிகாரிகள் அந்நாட்டிற்கு சமநிலை தேடித்தர அமைதியை தேடித்தர முயற்சித்துள்ளனர்.
ஈழ போரின்போது எந்த ஒரு மேற்கத்திய அதிகாரியும் இறங்கிவந்து யாருடனும் பேச்சு வார்த்தை நடத்தவோ நாட்டின் அமைதிக்காகவோ முற்படவில்லை.
மேலும், சிரியாவுக்கு போர் ஆயுதங்கள் அனுப்பியதற்காக ஹில்லரி கிலிண்டன், ரஷ்யாவை குற்றம் சாட்டியபோது, 'உள்நாட்டு மோதலுக்காக நாங்கள் ஆயுதங்கள் அனுப்ப மாட்டோம்; அனுப்பியதில்லை.. என கூறியுள்ளார் ரஷ்ய அதிபர் விலடிமிர் புத்தின்.
இப்படி வார்த்தையிட்ட அதே ரஷ்யாதான் இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையின்போது பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை சிதைத்த வெடி குண்டுகளை, அதிலும் தடை செய்யப்பட்ட வெடி குண்டுகளை அனுப்பிவைத்துள்ளது.
ஐக்கிய அமேரிக்கர்களோ, இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பிய எத்தரப்பினரையும் குற்றஞ்சாட்ட வில்லை.
சிரியா மீதான UNHCR மன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த சீனா, அங்கே போர் நிறுத்தப்பட வேண்டுமென்பதில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. சிரியாவில் உடனடி போர் நிறுத்தம் இல்லையெனில் இது பெருமளவிலான பாதிப்புடன் கூடிய உள் நாட்டுப்போருக்கு இழுத்துச் சென்றுவிடுமென கூறியுள்ளார் சீனாவின் ஐ.நா தூதர்.
ஏன் சிரியா நாட்டின் மீது கவனம் காட்டும் சீனா போன்ற நாடுகள் இலங்கையில் நடந்த யுத்தத்தை தமிழர்களின் இனப்படுகொலையின்போது அங்கே போர் நிறுத்தம் தேவையென கருதவில்லை? அதன் நிறுத்தத்திற்காக துணையுரியவுமில்லை? என இவ்வாராக தனது ஆதங்கத்தை நீதி இல்லா நிலத்தில்
நீதி கேட்டுள்ளார் ஈழத்தமிழ் ஆர்வலர் ஒருவர்.
நன்றி. தமிழ் நெற்.
மொழிபெயற்பு,
வெற்றிக்குமரன் தமிழரசி

No comments:

Post a Comment