Monday, June 04, 2012

மகிந்தர் தங்கியுள்ள விடுதிக்கு முன்னர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது !


மகிந்த ராஜபக்ஷவும் அவரது பட்டாளங்களும் லண்டனில் தங்கியுள்ள, விடுதியை முற்றுகையிட்டுப் போராட தமிழர்கள் தாயாரிவிட்டனர். அதற்கான அனுமதியையும் பொலிசார் வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது. இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறும் என மேலும் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் நிற்கும் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தரின் ஊடகப்பிரிவினர், ஹில்டன் ஹோட்டல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மகிந்தர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதனை, இந்த இரண்டு ஹோட்டல்களும் பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் !


இதனை அடுத்து, இன்று (பிரித்தானிய நேரப்படி) மதியம் 1.00 மணி முதல் தொடர்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் இடம் :




Hilton Hotel
22 Park Lane, London
W1K 1BE


The Dorchester
London Hilton on Park Lane
22 Park Lane London W1K 1BE





No comments:

Post a Comment