Saturday, June 02, 2012

மன்னார் ஆயருக்கு எம் ஆதரவைத் தெரிவிப்போம் ! கனடாவின் மொன்றியல் தமிழ்க் கத்தோலிக்க பணியகம் அறிக்கை

Rev.Jude-Amalathasமன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை மீதான சிறிலங்காவின் அழுத்தங்களுக்கு கனடாவின் மொன்றியல் மொன்றியல் தமிழ்க் கத்தோலிக்க சமூகமீட்பின் பங்குத் தந்தை அருட்பணியூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
மன்னார் ஆயருக்குஎம் ஆதரவைத் தெரிவிப்போம் என குறித்துரைத்துள்ள அந்த அறிக்கையில் :
மன்னார்ச சமூகத்தில் மீண்டும் அமைதியும் சமாதானமும் நிலவத் துணைபுரியுங்கள்.
ஆண்டகை இராயப்புயோசப் அவர்களது பாதுகாப்பு நிம்மதியான இயல்பு வாழ்க்கை என்பவற்றிற்கு உத்தரவாதம் வழங்குங்கள்.

ஆண்டகை அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேயப்பணிகள் அனைத்தும் அரச அமைப்புக்களது குந்தகங்கள் தலையீடுகள் எதுவுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழிவகை செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழுவடிவம் :
மன்னார் ஆயருக்குஎம் ஆதரவைத் தெரிவிப்போம்
மொன்றியல் தமிழ்க் கத்தோலிக்க சமூகமீட்பின் அன்னை மறைத்தள உறுப்பினர்களே! புலம் பெயர் தமிழ் சமூகத்தின் அன்பு சகோதரர்களே! எமதுநலன் விரும்பிகளே! உங்கள் அனைவர்க்கும் எமதுவாழ்த்துக்கள்.
மன்னார் மறைமாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்றுவரும் வருத்தத்திற்குரிய சில நிகழ்வுகளை நீங்கள் அனைவருமே நன்கறிந்திருப்பீர்கள்.
உரியதருணத்தில் இடம்பெற்ற நீதிபரிபாலனத் தலையீடுஎம்மனைவர்க்கும் நம்பிக்கையையும் நிம்மதியையும் தந்திருப்பதில் ஐயமேயில்லை.
எனினும் எமது பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய மன்னார் ஆண்டகை அதிவணக்கத்துக்குரிய இராயப்புயோசேப் அவர்கள் வதங்கித் தவிக்கும் வன்னிமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்ற ஒரேநோக்கில் இலங்கைஅரசின்’கற்றுக்கொண்டபாடங்
கள் மற்றும் நல்லிணக்கம்’ பற்றியஆணைக்குழு முன்தோன்றி விடயங்களைத் தெளிவுபடுத்தியதனை நாமனைவருமறிவோம்.உண்மையாகவே பாதிக்கப்பட்டமக்களுக்கான உதவிகள் வீணடிக்கப்படாதிருப்பதனை நிட்சயப்படுத்தும் வகையில் விடத்தல்தீவுப் பகுதியில் மீள்குடியேற்றவிண்ணப்பங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் சந்தர்ப்பவாத அரசியல் நோக்குடன் வெளியூர் மக்கள் கொண்டுவந்து குடியேற்றப்படுவதனை ஆண்டகை அவர்கள் ஆட்சேபித்தது யார்மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மனிதநேயத்துடன் நடந்துகொண்டாரென பாராட்டப்படவேண்டிய ஒரு முக்கியவிடயமாகும். மன்னார் ஆயர் இராயப்புயோசப் ஆண்டகைஅவர்களைக் கைதுசெய்துசிறையில் அடைக்கவேண்டுமென அண்மையில் ‘ஹெலஉறுமய’ கூச்சல் இட்டிருந்தமை உங்களுக்கு நினைவில் வரலாம். இதை ஒரு தனிப்பட்ட அசம்பாவிதமாகக் கருதமுடியாது. தம்புள்ளபள்ளிவாசலை மதவெறிகொண்ட பௌத்தபிக்குகள் நொருக்கியமையையும் அந்தச் சிக்கலில் இருந்து அரசு தன்னை விடுவிக்ககாலம் பிந்திமேற்கொள்ளும் முயற்சிகளைநாம் மன்னார் நிகழ்வுகளிலிருந்துபிரித்துப் பார்க்கமுடியாது.
இலங்கை அரசு மீள்குடியேற்றம் சம்பந்தமாகமன்னாரில் மேற்கொண்டுவரும் அநீதிகளால் எமதுமக்களின் மனவேதனைகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தம்புள்ளைச் சிக்கலிலிருந்துதம்மைத் தப்பித்து வைத்துக்கொள்ள முயல்வதே ஆளும் வர்க்கத்துக்குளிருக்கும் சிலசந்தர்ப்பவாதஅரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கின்றது.
அரசுவிவகாரங்களில் ஆரம்பத்திலிருந்தே மனச்சாட்சியற்ற முறையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் நடந்துவருகின்றார்.
அமைச்சர் அவர்கள் தம்மால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு மன்னார் மறைமாவட்டத்தின் வணக்கத்துக்குரிய குருமார்களைப் பழிக்கடாக்;களாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுஎமக்குப்பெரும் கவலைதரும் விடயமாகும்.
மன்னார்ச் சமூகத்தில் நிலவும் சுமுக சூழ்நிலையை உடைத்துத் தேவையற்ற பிரிவுகளையும் கொந்தளிப்புக்களையும் உருவாக்கும் தமதுசெயற்பாடுகள் குறித்துஅமைச்சர் அவர்கள்; அணுவளவும் கவலைகொண்டிருப்பதாகஎம்மால் அவதானிக்க முடியவில்லை.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களை ஸ்ரீலங்காஅரசின் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரனைசெய்தது மொன்றியல் தமிழ்க் கத்தோலிக்க சமூகத்தினராகிய எமக்கு அதி மிககவலையைத் தருவதாகஉள்ளது.
இவ்வாறு விசாரைண செய்யப்பட்டதற்கு கவலைதெரிவிப்பதோடு  ஆண்டகை அவர்களுக்கு ஆதரவுதெரிவித்தும் அனைத்துமத வழிபாடொண்றை மேற்கொள்ள முயன்றார்களென மாசுகற்பித்துமன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் உட்படவணக்கத்துக்குரிய டெஸ்மன்ட் குலாஸ் விக்ரர் ஜெயபாலன் குரூஸ் அருள்ராஜ் எமிலியானுஸ் பிள்ளை என்ற அப்பாவிக்குருமார் ஐவரை அவர்கள் நிலவரங்களால் தாக்குண்ட மக்களின் உண்மையான சேவகர்கள் என்ற நிலையைமறந்து இனங்களுக்கு இடையில் பேதங்களைஉருவாக்கமுயன்றார்கள் என்று அரசியல் அதிகாரமுள்ளவர்களது தூண்டுதல் காரணமாக போலிக்குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் பதிலளிக்குமாறு ஏற்பாடுசெய்யப்பட்டது.
இதானல் இனங்களுக்கிடையில் பேதங்களையும் கொந்தளிப்புக்களையும் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றஉண்மைஎமக்கு இன்னமும் மிகுந்தவேதனையைத் தருகின்றது. எனினும் இவ்வாறான அனைத்து மதவழிபாடொன்றினை மேலே பெயர்கூறப்பட்ட குருக்களால் ஒழுங்குசெய்யப்படவில்லை. முhறாக அவ்வாறான அனைத்துமத வழிபாட்டை மன்னார்க் கத்தோலிக்க இணையமே ஏற்பாடுசெய்தது என்பதே உண்மையாகும்.
தற்காலிகமாகவேனும் இனக்கொந்தளிப்பு என்ற அந்தவெடிமருந்துப் பெட்டகத்தை இறுக மூடவைத்திருக்கும் நீதிபதி அவர்களின் புத்திசாலித்தனமான முடிவையிட்டு நாமெல்லோரும் இப்போது  நிம்மதிப் பெருமூச்சுவிட்டாலும் ‘எனக்குப் பிற்பா எது அழிந்தாலும் கவலையில்லை’ என்றுநாம் ஆழ்ந்தகவலைகொள்ளாமல் இருக்கமுடியாது.
அண்மையில் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ‘முஸ்லிம் இனத்தின் குடியேற்றமுயற்சிகளுக்குக் குறுக்கேநிற்பவர்’ என்று ஆண்டகை மீது அபாண்டப் பழியைச் சுமத்தியிருக்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது நிலைப்பாடுபற்றி நாம் ஆழ்ந்தகவலைகொண்டுள்ளோம்.
ஒரு அரசில் பங்குவகிக்கும் கௌரவஅமைச்சர் என்ற உயர்ந்தநிலையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த இழிந்த கூற்று மன்னாரில் தமிழ்; முஸ்லிம் மக்களுக்கிடையில் தேவையற்ற உரசல்களையே தூண்டுவிக்கும்.
அன்றியும் இன மதபேதமற்று அனைத்து மக்களுக்கும் ஒரு ஒளிக்கம்பம் போன்றுதிகழ்ந்தவரும் ஒரு கௌரவம்வாய்ந்த மக்கள் பணியாளனாகிய ஆண்டகை அவர்கள் மீதான நல்லெண்ணத்தையும் மதிப்பையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை முற்றுமுழுமையாகக் கண்டிக்கணே;டியது எமது கடப்பாடும் தார்மீகக் கடமையுமாகும்.
மொன்றியல் தமிழ்க்கத்தோலிக்கசமூகத்தில் வாழ்பவர்களில் பலர் மன்னாரில் இருந்துபுலம் பெயர்ந்தவர்களும அவர்கள் வழிவந்தவர்களுமாவார்.
இவர்கள் அனைவருமே இலங்கைபொலிசுத் திணைக்களத்தின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான கண்மூடித்தனமான செயலை முற்றுமுழுதாகக் கண்டிக்கின்றார்கள்.
அனைத்துசமூகங்களுக்கும் ஒரேநீதி ஒரேநியாயம் என்றஅடிப்படையில் வாழும் ஆண்டகை அவர்களை இந்தமக்கள் மனமுவந்து வாழ்த்திநிற்கின்றார்கள்.
ஆதலால் நாம் வேண்டுவது:
மன்னார்ச் சமூகத்தில் மீண்டும் அமைதியும் சமாதானமும் நிலவத் துணைபுரியுங்கள்.
ஆண்டகை இராயப்புயோசப் அவர்களது பாதுகாப்பு நிம்மதியான இயல்பு வாழ்க்கை என்பவற்றிற்கு உத்தரவாதம் வழங்குங்கள்.
ஆண்டகை அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேயப்பணிகள் அனைத்தும் அரச அமைப்புக்களது குந்தகங்கள் தலையீடுகள் எதுவுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழிவகை செய்யுங்கள் எனக் கோரி நிற்போம்.
ஆண்டவர்  இயேசுவின் சமாதானமும் அமைதியும் என்றும் உங்களுடன் தங்கியிருக்கவேண்டிநிற்கும்.
இவ்வாறு மொன்றியல் தமிழ்க் கத்தோலிக்க சமூகமீட்பின் பங்குத் தந்தை அருட்பணியூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment